உங்கள் பைக் சொல்லித் தரும் ‘பல்லுயிர் பெருக்கம்’!


முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் ‘பல்லுயிர்ப் பெருக்கம்’ என்கிற சொல்லாக்கமும் அது குறித்த சொல்லாடலும் அதிகரித்துள்ள காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஏனென்றால் பூமியில் வாழும் திமிங்கலம் தொடங்கி, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் வரை கோடிக்கணக்கான உயிரினங்களோடு சேர்ந்தே நாம் வாழ்ந்து வருகிறோம். தாவரங்கள், விலங்குகள், பறவைகள், கடலுயிர்கள், நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி பரவலாகக் காணப்படும் சுற்றுச்சூழல் அமைப்பையே ‘பல்லுயிர்ப் பெருக்கம்’ என்கிறோம். இவற்றின் ‘உயிர்ச் சமநிலை’யைப் பாதுகாப்பதன் மூலமே மனித இனம் சிக்கல்கள் இல்லாமல் வாழ முடியும். ஏன் பாதுகாக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா?

வாழிடம், உணவு, இனப்பெருக்கம் போன்ற பல்வேறு வாழ்நிலைகளில், முற்றிலும் வேறுபடுகின்ற இக்கோடிக் கணக்கான உயிரினங்கள், ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டவையாக, ஒன்றையொன்று சார்ந்தவையாக வாழ்ந்து வருகின்றன. அதேநேரம், ஒவ்வொரு உயிரினமும் தனிப்பட்ட சுற்றுச்சூழலைத் தேடிக்கொள்கின்றன.எடுத்துக்காட்டாக, வெப்பமண்டலக் காடுகளில் பல்வகை மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் ஆகியவற்றுடன், பூச்சியினங்கள், பூஞ்சை உள்ளிட்ட நுண்ணுயிர்கள், காளான்கள், மீன்கள், ஊர்வன, பல்வகைப் பறவைகள், பாலூட்டிகள் வசிக்கின்றன. இந்த உயிர்கள் அழியாமல் இருக்கும்போதுதான் அக்காடுகள் உருவாக்கி வைத்திருக்கும் ‘பல்லுயிர்ப் பெருக்கம்’ பாதுகாக்கப்படும்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube