எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தீவிரம் காட்டும் சந்திரசேகர ராவ்: அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சந்திப்பு | டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தெலுங்கானா முதல்வர் கேசிஆர் சந்தித்தார்


பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்ற தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவை சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்தார்.

இன்று அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் மதிய உணவு உட்கொண்ட சந்திரசேகர ராவ், பின்னர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து சண்டிகருக்குப் பயணம் மேற்கொண்டார். முன்னதாக இரு மாநில முதலமைச்சர்களும் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு, தேசிய அரசியல் பிரச்சனைகள், தேசிய வளர்ச்சிக்கு மாநிலங்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | போலி என்கவுண்ட்டர்…விசாரணை ஆணைய அறிக்கையால் ஹைதராபாத் போலீஸாருக்கு சிக்கல்

சண்டிகர் செல்லும் சந்திரசேகர ராவ் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதுடன், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வரும் 26-ம் தேதி முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்திக்கவுள்ள சந்திரசேகர ராவ், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவையும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயன்று வரும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், முன்னதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரை சந்தித்துள்ளார்.

டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் கிடைத்த வெற்றியால் உற்சாகமடைந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது குஜராத் தேர்தலிலும் போட்டியிட உள்ளது. எனவே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டுமென்ற நோக்கத்தின் ஒரு பகுதியாகவே, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | குஜராத் தேர்தல்: ஆம் ஆத்மி – பாஜக இடையே வெடிக்கும் மோதல்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடரவும்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிகிராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube