பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், இந்திய அரசின் திறமையான வெளியுறவுக் கொள்கையே இதற்கு காரணம் என புகழாரம் சூட்டியுள்ளார். மத்திய அரசின் விலைக் குறைப்பு நடவடிக்கை குறித்து இம்ரான் கான் தனது ட்விட்டர் பதிவில், ‘குவாட் அமைப்பில் உறுப்பினராக இருந்தாலும், அமெரிக்காவின் அழுத்தங்களை பொருட்படுத்தாமல், இந்தியா ரஷ்யாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கியது. இதன் மூலம் அந்நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் எரிபொருள் வழங்கமுடிகிறது. இது போன்ற சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை தான் பாகிஸ்தானில் உருவாக்க எனது அரசு முயற்சி செய்தது.
குவாடின் ஒரு பகுதியாக இருந்த போதிலும், இந்தியா அமெரிக்காவிடமிருந்து அழுத்தத்தைத் தாங்கி, வெகுஜனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தள்ளுபடியில் ரஷ்ய எண்ணெயை வாங்கியது. இதைத்தான் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையின் உதவியுடன் நமது அரசு சாதித்து வருகிறது.
1/2 pic.twitter.com/O7O8wFS8jn– இம்ரான் கான் (@ImranKhanPTI) மே 21, 2022
எனது அரசுக்கு பாகிஸ்தானின் நலன் தான் பிரதானம். ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகள் அந்நிய சக்திக்கு அடிபணிந்து ஆட்சியை கலைத்துவிட்டனர். இதனால் பாகிஸ்தானில் தற்போது தலையில்லா ஆட்சி நடைபெற்று வருகிறது, பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி செல்கிறது’ என்றார்.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யாவுக்கு எதிராகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. இந்தியாவோ ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காமல் போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடுநிலை வகிக்கிறது. மேலும், ரஷ்யாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் அளித்தாலும், அதை கண்டுகொள்ளாமல் ரஷ்யாவுடன் வழக்கமான உறவையே இந்தியா தொடர்ந்து பின்பற்றி வருகிறது.
இதையும் படிங்க: கோவிட் இல்லை என்றாலும் கட்டாய தனிமை – அரசிடம் சிக்கி தவிக்கும் சீன மக்கள்
அதேவேளை, ரஷ்யாவுக்கு ஆதரவு தரும் விதமான அன்றைய இம்ரான் கானின் பாகிஸ்தான் அரசு செயல்பட்டது. இதையடுத்து சில வாரங்களிலேயே இம்ரான் கான் அரசு கவிழ்க்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு சக்திகளின் காரணமாகவே தனது அரசு கவிழ்க்கப்பட்டது என இம்ரான் கான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். அதேபோல, இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மிகச் சிறப்பானது என இந்திய அரசுக்கு தொடர்ந்து புகழாரம் சூட்டி வருகிறார் இம்ரான் கான்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.