திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகவும் தமிழக முதல்வராகவும் செயலாற்றிய மு.கருணாநிதி சிறந்த தமிழ்ப் புலமைக்கும் தேர்ந்த பேச்சாற்றலுக்கும் பேர்போனவர். 1986 செப்டம்பர் 15 அன்று சென்னை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழா கவியரங்கில் கருணாநிதி ஆற்றிய தலைமை உரை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் 1986இல் நடைபெற்ற அருப்புக்கோட்டை, திருநெல்வேலி இடைத்தேர்தல்களில் திமுக தோல்வியைச் சந்தித்த நேரம் அது. அப்போது நடைபெற்ற கவியரங்க மேடையைக் கட்சியின் தோல்விக்கான அரசியல் விளக்க மேடையாகவும் கருணாநிதி மாற்றினார். அவரது உரையின் சில வரிகள் இவை: