கேரளாவிலிருந்து லாரி மூலம் கொண்டு வரப்பட்ட கோழி கழிவு… தடுத்து நிறுத்திய பொதுமக்கள் – ஓட்டுநர் தப்பி ஓட்டம்


கேரளாவிலிருந்து கோழி மற்றும் மாமிச கழிவுகளை தமிழக பதிவு எண் கொண்ட ஒரு லாரியில் ஏற்றி நேற்று அதிகாலை களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை வழியாக மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் அந்த லாரியை துரத்தி சென்றுள்ளனர்.

ஆனால் அந்த லாரி பழுதடைந்த நிலையில் அதன் பாகங்கள் உடைந்து தொங்கியவாறு மெதுவாக ஊர்ந்து, ஊர்ந்து சென்றுள்ளது . அந்த லாரியால் வேகமாக செல்ல முடியவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த லாரி ஓட்டுநர் திருத்துவபுரம் பகுதியில் சாலை ஓரம் நிறுத்தியுள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டு லாரியை அங்கிருந்து எடுத்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

உடனே லாரியை அங்கிருந்து எடுத்து குழித்துறை பழைய பாலத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதோடு சாலையில் செல்லும் நபர்களும் மூக்கை பிடித்தவாறு சென்று வந்தனர். இதையடுத்து குழித்துறை நகராட்சிக்கு பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன். ஆசை தம்பி, கவுன்சிலர் ரெத்தினமணி, ஆணையாளர் ராமதிலகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிறுத்தப்பட்டிருந்த லாரியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் களியக்காவிளை போலீசாருக்கு கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாரி ஓட்டுநரை தேடி பார்த்தனர். ஆனால் லாரி ஓட்டுநர் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் லாரியின் உரிமையாளரை தொடர்பு கொண்டு அந்த லாரியை ஏற்கனவே விற்பனை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது லாரியை வாங்கிய நபரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போலீசார் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்கவும் | ராஜீவ் நினைவு தினத்தில் எக்குதப்பாக ட்வீட் போட்டு சிக்கிய காங்கிரஸ் தலைவர்

ஆனால் கேரளாவில் இருந்து வந்த லாரி கன்யாகுமரி- கேரளா எல்லை சோதனைச்சாவடியான களியக்காவிளையில் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி துர்நாற்றம் வீசிய நிலையிலுள்ள அந்த லாரி எவ்வாறு உள்ளே வந்தது என்றும் மேலும் ஒற்றாமரம் போக்குவரத்து சோதனைச் சாவடி , அதனை அடுத்து படந்தாலுமூடு சோதனைச்சாவடியைக் கடந்து எவ்வாறு குழித்துறை வரை சென்றது என போலீசாரிடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வெளியிட்டவர்:சங்கரவடிவு ஜி

முதலில் வெளியிடப்பட்டது:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube