கொடைக்கானலில் ஏரி மேல் ஜிப்லைன் சேவை… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


சுற்றுலா பயணிகள் மனம் கவரும் கொடைக்கானல் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்தில் தமிழகத்தில் முதன் முறையாக ஏரி ஜிப்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இதில் மகிழ்ச்சியுடன் சவாரி செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பைன் மரக்காடுகள், தூண்பாறை, குணா குகை உள்ளிட்ட 12 மைல் சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. ஏற்படுத்தப்பட்டு இன்றளவிலும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் மன்னவனூர் சுற்றுலா தலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் வகையில் தமிழகத்தில் முதன் முறையாக ஏரி மேல் ஜிப்லைன் மூலம் சவாரி செய்வது தற்போது துவங்கப்பட்டுள்ளது, சுமார் 250 மீட்டர் தூரம். 50 வினாடிகளில் 45 கிலோ எடை முதல் 75 கிலோ வரை எடை கொண்ட சுற்றுலா பயணிகள் இரண்டு மலைமுகடுகளின் இடையில் மேற்புறத்தில் இருந்து கீழ் புறத்திற்கு சென்றடைய ஜிப்லைன் மூலம் சவாரி செய்வது துவங்குகிறது.

இதையும் படிங்க: சபரிமலையில் இனி படி பூஜை பாதிக்கப்படாது… ஹைட்ராலிக் கூரை அமைக்க முடிவு…

மேலும் ஜிப்லைன் சவாரி செய்வதற்கு நபர் ஒருவருக்கு 500 கட்டணம் வரை நிர்ணயிக்கப்பட்டு தலைக்கவசம்,பிரத்தியேக பாதுகாப்பு உடை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்ககள் வழங்கப் படுகிறது. ஜிப்லைனில் சவாரி மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் ஏரியின் மேற்புறத்தில் இருந்து பச்சை பசேல் என காட்சியளிக்கும் புல்வெளிப்பகுதிகளையும்,ஏரியின் அழகினையும், ப’சுமையுடன் கூடிய’ மலை முகடுகளையும் கண்டு ரசித்து சவாரி மேற்கொண்டு உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் ஜிப்லைன் சவாரி செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மன்னவனூர் சூழல் சுற்றுலா தளத்தில் சிறுவர்களை கவரும் வகையில் சிறுவர்கள் பூங்கா அமைப்பதற்காக தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

செய்தியாளர்: ஜாப’ர்சாதிக் -கொடைக்கான’ல்

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube