சீமெந்து மற்றும் எஃகு விலை விரைவில் அமலுக்கு வரும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் சிமெண்ட், எஃகு விலையும் குறையும்: குட் நிட்யூஸ் அளித்த நிர்மலா சீதாராமன்


நாட்டில் பெட்ரோல், டீசல் விலை, பணவீக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், தற்போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை சுமார் ரூ.9.5 என்ற அளவில், டீசல் விலை ரூ.7 என்ற அளவில் குறைந்துள்ளது. இதை அடுத்து, சிமெண்ட், எஃகு இவற்றின் விலைகளை குறைக்கும் வகையில் மத்திய அரசின் முக்கிய உத்தியை எடுக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

சிமென்ட், இரும்பு விலை குறையும்

பெட்ரோல் மற்றும் டீசல் தவிர, சிமென்ட், எஃகு மற்றும் இரும்பு ஆகியவற்றின் விலையை குறைக்கவும் அரசு, முக்கிய முடிவை எடுத்துள்ளது. இரும்பு, எஃகு மற்றும் மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் அவற்றின் மீதான சுங்க வரியில் மாற்றம் செய்யப்படும். நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைவு!

சிமென்ட் மற்றும் எஃகு விலைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, ​​“மூலப்பொருட்கள் சப்ளை செய்பவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் இரும்பு மற்றும் எஃகுக்கான விலையை குறைக்க ஏதுவாக சுங்க வரியை குறைக்கலாம். சில எஃகு மூலப்பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும். சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும்.

நிதி அமைச்சர் கூறிய தகவல்

பிளாஸ்டிக் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் மீதான சுங்க வரியை குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறினார். இந்த பொருட்களைப் பொருத்தவரை இந்தியாவின் இறக்குமதி சார்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், சிமென்ட் விலையை குறைக்கவும், அதனை எட்லிடில் கொண்டு செல்லக்கூடிய வகையிலும், நிலைமையை மேம்படுத்தும் திட்டம் உள்ளதாக கூறினார். சிமென்ட் எளிதாக கொண்டு செல்லக் கூடிய வகையில் நிலைமையை மேம்படுத்தும் வகையில் விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் விலை குறைய வாய்ப்புள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பட்டதற்கு எஃகு மற்றும் சிமென்ட் மிகவும் முக்கியமானது. மேலும், வீடு வாங்குவோர், சிமெண்ட் விலை உயர்ந்ததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், அதன் விலையை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசு உணர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | எல்பிஜி சிலிண்டருக்கு தலா ரூ.200 மானியம் வழங்கப்படும்; எப்படி பெறுவது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரவும்.

முகநூலில் @ZEETamilNewsடிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிகிராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்!!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube