தளபதி 66 படத்தின் பரபரப்பான அப்டேட் குறித்து பிரபு தேவா


13 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்தில் பிரபுதேவா இணைந்துள்ளார். இந்த காம்போவில் விஜய்யின் ஓபனிங் சாங் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பிரபுதேவாவுக்கு பல முகங்கள் உண்டு. இந்த 3 பிரிவிலும் பிரபுதேவா முத்திரை பதித்துள்ளார். இந்திய அளவில் அறியப்படும் சினிமா முகமாக இருக்கும் பிரபுதேவாவை, தங்கள் படத்தில் நடன இயக்குனராக அமைக்க முன்னணி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் உருவான ரவுடி பேபி பாடல் யூடியூபில் 130 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. அவர் இடம்பெற்றாலே பாடல் ஹிட்டுதான் என்ற சினிமா நிபுணர்கள் கூறுவதை பார்க்க முடியும்.

இந்நிலையில் தளபதி 66 படத்தில் பாடல் ஒன்றுக்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணியாற்றியுள்ளார். இந்த பாடல் ஓபனிங் சாங்காக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க – விறுவிறுப்பாக நடைபெறும் வெற்றி மாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பு… ஃபோட்டோஸ் பகிர்ந்த விஜய் சேதுபதி

தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் தளபதி 66 படத்திற்கு இசையமைத்து வருகிறார். இவரது இசையில் பாடல்கள் மேக்சிமம் ஹிட்டாகி விடும் என்பதாலும், விஜய் – தமன் காம்போ என்பதாலும் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிஜிஎம் மற்றும் பாடல்களில் தமன் வெளுத்து வாங்குவார் என்பதால், எப்போது தளபதி 66 பாடல்களும், டிரெய்லரும் வெளியாகும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க – ஓடிடியில் 200வது நாள்… புதிய போஸ்டரை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜெய்பீம் படக்குழு

முன்னதாக போக்கிரி மற்றும் வில்லு படங்களில் விஜய்யுடன் பிரபுதேவா பணியாற்றியிருந்தார். தற்போது தளபதி 66 படத்தின் ஷூட்டிங் ஐதராபாத், சென்னை நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த மகரிஷி திரைப்படம் மெகாஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube