தளபதி 66 படத்தில் மேலும் ஒரு ஹீரோயின் விரைவில் வெளியாகும்


விஜய் நடித்துவரும் தளபதி 66 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் இன்னொரு நடிகை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி இந்த படத்தை இயக்குகிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க முன்னணி இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, பிரபு, யோகி பாபு, ஷாம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் தற்போது குடும்பக்கதை சார்ந்த படத்தில் நடிப்பதால், எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். ஐதராபாத் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் விஜய்க்கு இன்னொரு ஹீரோயின் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க – ‘ரஜினி படங்களில் பெண்களை தப்பா காட்டிருக்காங்க’ – ஆர்.ஜே. பாலாஜி பேச்சால் சர்ச்சை

அவர் யார் என்கிற விபரம் இன்று வெளியாகாத நிலையில், பீஸ்ட் படத்தில் ரசிகர்களை கவர்ந்த பூஜா ஹெக்டே, விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என தகவல்கள் பரவியுள்ளன.

இதையும் படிங்க – கே.ஜி.எஃப். இயக்குனர் பிரசாந்த் நீலுடன் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்… ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் மற்றும் பீஸ்டில் படத்தில் நடிப்பு உள்ளிட்டவைகளில் விஜய் ரசிகர்களின் முதல் சாய்ஸ் ஹீரோயினாக பூஜா ஹெக்டே உள்ளார்.

தளபதி 66 படப்பிடிப்பு அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதியன்று தளபதி 66 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.





Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube