நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்து ஓரிரு நாளில் நல்ல செய்தி


பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து அடுத்த ஆறு பேர் விடுதலை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய இந்த மனு மீது விசாரணை நடத்தியது, அப்போது, ​​பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல தனி அதிகாரமில்லை.

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின் படி, 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையே முடிவெடுக்கலாம். அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சென்றால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. தொடர்ந்து, இந்த வழக்கில்.18ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் , 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, 6 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது. இந்த தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு மற்ற 6 பேரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும், தமிழக அரசே 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து அடுத்த ஆறு பேர் விடுதலை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து காணொளிக் காட்சி மூலம், 6 பேர் விடுதலை தொடர்பாக சட்டத்துறை வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதில், அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, திமுக எம்.பி., ஆ.ராசா, தலைமை செயலாளர் இறையன்பு, அரசு தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, 6 பேரின் விடுதலை குறித்து திங்கட்கிழமை தமிழக அரசு மூலம் நல்ல முடிவு வந்துள்ளது என நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.





Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube