மன இறுக்கத்தை தகர்க்குமா கண்ணீர்? – ஓர் உளவியல் பார்வை | கண்ணீர் மன அழுத்தத்தை உடைக்கிறதா?: ஒரு உளவியல் முன்னோக்கு


நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் அல்லது இந்த உலகமே உங்களை கைவிட்டுவிட்டதென தனிமையை உணர்கிறீர்களா? அப்போது, ​​யாருக்கும் தெரியாமல் தனியாக உட்கார்ந்து அழுதால் நன்றாக இருக்கும் என்று தோன்றலாம். உங்கள் உடல் நலன் இல்லாமலோ அல்லது சோர்வாகவோ இருக்கும்போது வருத்தமாக உணர்கிறீர்கள். சரி அப்போது நமக்கு கண்ணீர் வரும் என்று கவனித்திருக்கிறீர்களா? சோகத்திற்கும் கண்ணீருக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்திருக்கிறீர்களா? காரணம் இருக்கிறது. கண்ணீர் பல உளவியல் செயல்பாடுகளை செய்கிறது. நாம் அதிக சந்தோஷமாகவோ, துக்கத்திலோ இருக்கும்போது, ​​நமது உணர்வுகளை கண்ணீரே வெளிப்படுத்துகிறது.

ஏன் கண்ணீர் வருகிறது, கண்ணீரால் ஏற்படும் நம்மை நாம் என்னவென்று விவரிக்கிறார் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் பெக்கி கெர்ன்…

”துரதிர்ஷ்டவசமாக நாம் மிகவும் மன அழுத்தம், சோர்வாக இருக்கிறோம் அல்லது நாம் அதிகமான உடல் மற்றும் மன வலியில் இருக்கும் போது மூளையின் சிம்பதிடிக் மண்டலம் தொடர்ந்து செயல்படும். அப்போது மூளையின் முன்புறணி, ஒரே நேரத்தில் பல்வேறு புரோகிராம்களால் இயங்கும் கணினியைப் போல நிரம்பி வழியும். மூளை நமது உணர்களை எதிர்பார்த்த வகையில் நெறிபடுத்த திணறும் போது கண்ணீர் அல்லது கோபம் போன்ற வெளிப்புற உணர்வுகள் நம்மிடமிருந்து வெளிப்படும். நமது முகத்தில் கண்ணீர் வழியும் போது தான் நாம் எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டிருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும்.

சிலர் மற்றவர்களை விட அதிகமாக அழுவதற்கான வாய்ப்புகளை கொண்டுள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகமாக அழுகின்றனர். சமூகத்தின் எதிர்பார்ப்புகளைத் தவிர அதற்கான தெளிவான விளக்கக் காரணங்கள் இல்லை. அதிகமாக அனுதாபப்படக்கூடிய பண்புகளை கொண்டவர்கள் மற்றவர்களை விட அதிகம் அழக்கூடியவர்களாக இருப்பார்கள். அழுகையும் அழுத்தத்திற்கான வெளிப்பாடு அதிகமானது தான். அதற்கு மூளை அதிகமான உணர்ச்சிகளால் நிரம்பி வழிகிறது என்று அர்த்தம்.

கண்ணீர் உதவிக்கான அறைகூவலாக செயல்பட்டு, நாம் நலமாக இல்லை நமக்கு ஆதரவு தேவை என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துகிறது. பல நேரங்களில் கண்ணீர் மற்றவர்கள் மீதான அனுதாபத்தை வெளிப்படுத்தி அவர்களுடன் இணைந்திருக்க உதவி செய்கிறது. மற்றொரு நபர் மீது ஆழ்ந்த அனுதாபம் வரும் போது கண்ணீர் வெளிப்பட்டு அவர்களுடன் சேர்ந்து நம்மையும் அழவைத்து விடுகிறது. இதனால் சமூக பிணைப்பு வலுப்படுத்தப்படுகிறது.

கண்ணீர் மனித இயல்புகளில் ஒன்று. குறிப்பாக கடந்த சில வருடங்கள் அதிகமான அழுத்தங்களை தந்துள்ளது. அந்த மன இறுக்கத்திலிருந்து வெளியேறி அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கு அழுகை சிறந்த தீர்வாக இருக்கலாம். ஆனால் நீங்கள் மிகவும் அழுவதாக உணர்ந்தால் மருத்துவரை சந்தித்து அழுகைக்கான உடல் மற்றும் உளவியல் காரணங்களைக் கண்டறிந்தார்.”

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube