டாக்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பு வந்தது. சன் பிக்சர்ஸ் பேனரில் வெளிவந்த இந்த திரைப்படம் கலவை விமர்சனங்களைப் பெற்றது.
படத்தின் திரைக்கதையில் ஏற்பட்ட பலவீனத்தால், நெகடிவ் விமர்சனங்கள் பீஸ்டிற்கு அதிகம் கிடைத்தன. இருப்பினும், அரபிக்குத்து பாடலை பான் வேர்டு பாடலாக மாற்றியது, பூஜா ஹெக்டேவை விஜய்க்கு ஜோடி சேர்த்தது, முந்தைய படங்களைப் போல் இல்லாமல் விஜய்க்கு கூடுதல் மாஸ்ஸாகக் காட்டியது உள்ளிட்ட காரணங்களால் நெல்சன் பாராட்டப்படுகிறார்.
இதையும் படிங்க – விக்ரமுடன் வாணி போஜன்… மகான் படத்தில் மிஸ் ஆன காட்சிகள்!
அடுத்து ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது.
இதையும் படிங்க – ‘ரஜினி படங்களில் பெண்களை தப்பா காட்டிருக்காங்க’ – ஆர்.ஜே. பாலாஜி பேச்சால் சர்ச்சை
இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டாக்டர் படத்தில் இடம்பெற்ற பிரியங்கா மோகன் ரஜினி படத்திலும் இடம் பெறுகிறார்.
#தளபதி ❤️ #மிருகம் 💥@நடிகர் விஜய் @anirudhofficial @hegdepooja @சூரிய படங்கள் @manojdft @நிர்மல்கட்ஸ் @KiranDrk @அன்பரிவ் @Pallavi_offl @எப்போதும் ஜானி @ஜெகதீஷ்பிளிஸ் pic.twitter.com/NfhHx9pY9n
– நெல்சன் திலீப்குமார் (@Nelsondilpkumar) ஏப்ரல் 25, 2022
சூப்பர் ஸ்டாரை வழங்குகிறோம் @ரஜினிகாந்த்கள் #தலைவர்169 இயக்கம் @நெல்சன்டில்ப்குமார் மற்றும் இசை @anirudhofficial
— சன் பிக்சர்ஸ் (@sunpictures) பிப்ரவரி 10, 2022
இந்நிலையில் பீஸ்ட் படக்குழுவினர், பிரியங்கா மோகன், கவின் உள்ளிட்டோருடன் நெல்சன் துபாய் சென்றுள்ளார்.
அவரது மனைவி மோனிஷா நெல்சன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
பீஸ்ட் படம் சறுக்கிய நிலையில் கட்டாய வெற்றியை கோலிவுட்டில் பதிவு செய்ய வேண்டும் என்ற நெருக்கடியுடன், சூப்பர் ஸ்டாரை இயக்கியுள்ளார் நெல்சன்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.