முகத்தை பளிங்கு மாதிரி மாத்தற கொத்தமல்லி பேஸ்பேக்… எப்படி பயன்படுத்துவது…கொத்தமல்லி இலையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதன் தண்டு, இலை, விதை ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்திருக்கும் கொத்தமல்லியில் வைட்டமின் ஈ யும் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இது சருமப் பராமரிப்புக்கு மிகவும் மிகுந்தது.

​சருமப் பராமரிப்பு

மாசுக்கள் மற்றும் தூசுகளால் சருமப் பிரச்சினைகள் அதிகம் உண்டாகின்றன.

சூரிய ஒளியின் அதிகப்படியான வெப்பத்தால், புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்படைகிறது.

சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் உண்டாகும்.

இந்த பிரச்சினைகளைச் சரிசெய்ய கொத்தமல்லி இலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொத்தமல்லி இலையை எந்தெந்த சருமப் பிரச்சினைகளுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்ற பார்க்கலாம்.

​கரும்புள்ளிகள் குறைய

samayam tamil

மூக்கு, வாய்க்குக் கீழ்ப்பகுதி மற்றும் நெற்றியில் அதிக அளவில் கரும்புள்ளிகள் இருக்கும். அவற்றைக் குறைக்க கொத்தமல்லி பெரிதும் உதவும்.

2 ஸ்பூன் கொத்தமல்லி சாறெடுத்து அதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறைக் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாரத்தில் இதை இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் குறையும்.

​மென்மையான சருமத்துக்கு

samayam tamil

குழந்தையின் சருமம் போல உங்களுடைய சருமமும் மென்மையாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் கொத்தமல்லியைத் தேந்தெடுக்கலாம்.

2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 ஸ்பூன் பால் மற்றும் அதே அளவு வெள்ளரிக்காய் சாறும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்கு 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவுங்கள். வாரத்திற்கு 2 நாட்கள் இதை முயற்சி செய்து பாருங்கள். ஓரிரு வாரங்களில் சருமத்தில் நல்ல மாற்றம் உண்டாகும்.

​சருமத்தின் நிறத்தை அதிகரிக்க

samayam tamil

சருமத்தில் கருந்திட்டுக்கள், முகம் முழுக்க ஒரே நிறமாக இல்லாமல் அன் ஈவன் டோனுடன் இருப்பவர்கள் சருமத்தின் நிறத்தைக் கூட்டவும் கருந்திட்டுக்களைக் களையவும் கொத்தமல்லி இலை சருமத்தில் சிறப்பாகச் செயலாற்றும்.

கொத்தமல்லி இலையின் சாறுடன் சிறிது கற்றாழை ஜெல்லும் அதனுடன் தயிரும் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

10 நிமிடங்கள் கழித்து நன்கு வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். பின்பும் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் நல்ல கலராகும்.

குறிப்பாக, எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த பலனைக் கொடுக்கும்

​கொத்தமல்லி பேஸ்பேக்

samayam tamil

தேவையான பொருட்கள்

1 கப் கொத்தமல்லி இலைகள்

1 ஸ்பூன் எலுமிச்சை சாறு

1 ஸ்பூன் கற்றாழை ஜெல்

1 ஸ்பூன் ரோஸ் வாட்டர்

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்த கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக அந்த சாறில் சிறிது எலுமிச்சை சாறும் கற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் வரை உலர விடுங்கள்.

பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். முதல் முறை பயன்படுத்தியதுமே நல்ல வித்தியாசத்தை உங்களால் உணர முடியும்.

6

6Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube