முழுப் பட்டியல் இங்கே – News18 Tamil


வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள் தொடர்பான விபரங்கள் இங்கே காணலாம்.

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1. UPSC NDA Exam 2022: தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி 2022 எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணயைம் (யுபிஎஸ்சி) வெளியிட்டது. யார் விண்ணப்பிக்கலாம்: திருமணமாகாத ஆண்/பெண் இந்திய குடிமக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 2004 ஜனவரி 2 பின்பாக பிறந்தவர்கள் மற்றும் 2007, ஜனவரி 1 முன்பாக பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

UPSC: தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது – முழு விபரம் இதோ

2.  ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு 2022: முப்படைகளின் அதிகாரிகள் பதவிக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு 2022 (CSDS Examination), தேர்வுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காலியிடங்கள்: 339

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:https://upsconline.nic.in/

UPSC CSDS Exam 2022  

3. சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

இந்தியாவின் பொதுத் துறை நிறுவனமான சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்ப படிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை https://www.cciltd.in/ என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.5.2022 மாலை 5.00 மணி.

4. பணியாளர் தேர்வாணையம் 2065 காலியிடங்கள் (Phase X/2022/Selection Posts):  மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில் காலியாக உள்ள 2,065 பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் ஆள் சேர்ப்பு நடத்தவுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வழியாக 13.06.2022 (இரவு 23.00 மணி வரை ) ஆணையத்தின் ssc.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

SSC 2022: எஸ்எஸ்சி-யில் 2065 காலிப்பணியிடங்கள் – மெட்ரிக் கல்வி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் 

5. Delhi Police Head Constable: டெல்லி காவல்துறையில் தலைமை காவலர் பணி

டெல்லி காவல்துறையில் காலியாக உள்ள 835 தலைமை காவலர் பணியிடங்களுக்கு (Head Constable) பணியாளர் தேர்வாணையம் ஆள் சேர்ப்பு நடத்தவுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வழியாக 16.06.2022 (இரவு 23.00 மணி வரை ) ஆணையத்தின் ssc.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

6. அஸ்ஸாம் ரைஃபிள் படைப்பிரிவு: தொழில்நுட்ப, டிரேட்ஸ் மேன் வீரர் உள்ளிட்ட குரூப் பி மற்றும் குரூப் சி காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அஸ்ஸாம் ரைஃபிள் படைப்பிரிவு தலைமை இயக்குனரகம் (Office of the Director-General Assam Rifles) வெளியிட்டுள்ளது.

2022, ஜூன் 6ம் தேதியிலிருந்து ஆன்லைன் மூலம் பெறப்படும். இணையவழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி 2022 ஜுலை 20 நள்ளிரவு 11:59 மணி வரை.

www.assamrifles.gov.in

7. கிராம அஞ்சல் பணி: 38,926 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டது. குறைந்தபட்ச பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். 

Gramin Dak Sevak Recruitment 2022 Apply Online

ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இணையதளம் மூலம் விண்ணப்பபங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 5 ஆகும். 

8. Hindu Religious and Charitable Endowments Department Group VII – B :  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் VII-B (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) செயல் அலுவலர் நிலை – III பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை.. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் – முழு விவரம்

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 17.06.2022. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 10.09.2022

9. இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுவில் (ICAR) 462 காலிப்பணியிடங்கள்

இந்திய வேளாண் ஆராய்ச்சி குழு டெல்லியில் உள்ள தலைமையகம் மற்றும் அதன் இதர அமைப்பு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது.

இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்குரிய கடைசி நாள் : ஜூன் 1; அன்றிரவே விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube