சென்னை: மருத்துவப் படிப்புக்கான பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, 1,500-க்கும் மேற்பட்ட டாக்டர்களை உருவாக்கிப் புகழ்பெற்றது சென்னையில் உள்ள லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன்ஸ் நிறுவனம்.
இந்நிறுவனம் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கென, கேரியர் பாய்ன்ட் நிறுவனத்துடன் இணைந்து, நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை ஆன்லைனில் இந்த ஆண்டு நடத்துகிறது. வழக்கமாகப் பெறப்படும் கட்டணமான ரூ.9,999, தமிழக மாணவர்களுக்காகரூ.4,999-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லிம்ரா நிறுவன இயக்குநர் முகமது கனி கூறும்போது, ‘‘வகுப்புகள் இணையவழியில் 45 நாட்கள் நடத்தப்படும். தினந்தோறும் தேர்வுக்கான 3 பாடங்களுக்கு, 3 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படும்.
இவை மொத்தம் 1,000 விடியோ ஃபைல்களாகப் பதியப்பட்டு, மாணவர்களுக்கு அனுப்பப்படும். அவற்றை மீண்டும் மீண்டும் இயக்கி, மாணவர்கள் பாடங்களைத் தெளிவாகவும், முழுமையாகவும் கற்றுக் கொள்ளலாம். மேலும், அன்றைய பாடங்கள், அன்று மாலையிலேயே கோப்புகளாக மாணவர்களின் தொலைபேசியில் அனுப்பிவைக்கப்படும்.
பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுசெய்ய, வாரந்தோறும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். கற்றுத் தரப்பட்ட பாடங்களில் வாரந்தோறும் தேர்வுகள் நடத்தப்படும். 45 நாட்களுக்குப் பின்னர், தினமும் ஒரு தேர்வு வீதம் 6 நாட்களுக்கு 6 தேசிய அளவிலான தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும்.
தேசிய அளவில்வெற்றி பெறும் வகையில் மாணவர்களைத் தயார் செய்வதில் அனுபவம் உள்ள கேரியர் பாய்ன்ட் ஆசிரியர்கள், இந்த பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள்.
தொடர்ந்து வகுப்புகளையும், தேர்வுகளையும் முறையாகப் பின்பற்றும் மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்தது 500 மதிப் பெண் எடுக்க உத்தரவாதம் தருகிறோம்’’ என்றார். ஆர்வமுள்ள மாணவர்கள் இன்றே பதிவுசெய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்கள் மற்றும் தொடர்புக்கான தொலைபேசி எண்கள். 9952922333/ 9444615363
முகவரி: லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் 177, ராயப்பேட்டை ஹைரோட், எஸ்.எம்.எஸ். செண்டர், மைலாப்பூர், சென்னை 600 004.