தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம்சரண், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். இவரை ரசிகர்கள் மெகா பவர் ஸ்டார் என்று அழைக்கின்றனர்.
ராம்சரண் நடிப்பில் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரூ. 1200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த படத்தில் ராம் சரணின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் தெலுங்கு ட்ரெய்லரை ராம்சரண் வெளியிட்டுள்ளார். படம் வெற்றி பெறுவதற்கு படக்குழுவை வாழ்த்துவதாக ராம் சரண் தனது ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சூர்யா இடம் பெற்றுள்ளார்.
ஆக்ஷனை வெளியிட்டதில் மகிழ்ச்சி #விக்ரம் தெலுங்கு டிரெய்லர்#விக்ரம் ஹிட்லிஸ்ட்https://t.co/3EFvSmFSmt
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் @ikamalhaasan ஐயா, @Dir_Lokesh @VijaySethuOffl #ஃபஹத் ஃபாசில் @anirudhofficial @RKFI & குழு!
நல்ல அதிர்ஷ்டம் @நடிகர்_நிதின் @SreshthMovies தெலுங்கு வெளியீட்டிற்கு pic.twitter.com/M2RDYwodID
— ராம் சரண் (@AlwaysRamCharan) மே 20, 2022
தமிழில் விக்ரம் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மல்டி ஹீரோக்கள் ஒரே நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
ஜூன் 3-ம்தேதி விக்ரம் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதையொட்டி அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் எப்போது தொடங்கும் என்ற ஆர்வத்தில் சினிமா ரசிகர்கள் உள்ளனர். விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் அதிகம் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமலின் மகனாக சூர்யா நடித்துள்ளார் என்றும் யூகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேட்டி அளித்த கமல்ஹாசன் படத்தின் கடைசி நிமிடங்களில் சூர்யா இடம் பெறுவார் என்று கூறியிருந்தார். சூர்யா இடம் பெறும் காட்சி, விக்ரம் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறிய கமல் அது, விக்ரமின் அடுத்த பாகமாகவும் இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.