விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல் ரியாக்ட் ஆன பிறகு MI’s Win Over DC Helped RCB to Qualify for Playoffs, நாங்க வந்துட்டோம்னு சொல்லு- ஆர்சிபி, கோலி, மேக்ஸ்வெல் கொண்டாட்டம், குதியாட்டம் வைரல் – News18 Tamil


நெகெட்டிவ் ரன் ரேட்டில் இருந்தாலும், ஒரு அணியாகவே திரண்டு ஆடவிட்டாலும் சூளைச்செங்கலில் உதிர்ந்த செங்கல்லாக தனித்தனியாக 11 வீரர்கள் இருந்தாலும் ரிஷப் பண்ட் போன்ற ஒரு கத்துக்குட்டி கேப்டன்சி அணி பிளே ஆஃப் வருவதை விட அனுபவமிக்க ஆர்சிபி அணி கொஞ்சம் சுற்றுக்குத் தகுதி பெற்ற குஜராத், லக்னோ, ராஜஸ்தானுக்கு கலக்கத்தையே ஏற்படுத்தியிருக்கும். இந்நிலையில்தான் ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதை கிங் கோலி, கிளென் மேக்ஸ்வெல், டுபிளெசிஸ் கொண்டாடுகின்றனர்.

அன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் பிரமாதமாக ஆடி ஆர்சிபியை வெற்றி பெற்றது, ஆனால் அதெல்லாம் விஷயமல்ல, நேற்று ரிஷப் பண்ட் தலைமையில் டெல்லி கேப்பிடல்ஸ் படுமோசமாக ஆடி தோற்றதுதான் ஆர்சிபி ஆஃப் வாய்ப்புக்குக் காரணம்.

இந்தியன்ஸ் பீல்டிங் படுமோசம், கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் அதைவிட படுமோசம், அந்த அணியின் பந்து வீச்சை பும்ரா நீங்கலாக அடித்து நொறுக்க வேண்டும் ஆனால் பும்ரா நேற்று பயங்கரமாக வீசினார், மிட்செல் மார்ஷுக்கு ஒரு டெஸ்ட் கிளாஸ் பந்து வீசி ஸ்லிப்பில் கேட்ச் ஆக வெளியேறினார் பின்னால் சாய்ந்து எட்ஜ் செய்து கீழே விழுந்தார், இந்தப் பந்தை பிரிதிவி ஷா வாழ்நாளெல்லாம் மறக்க முடியாது. பிறகு கடைசியில் பயங்கரமாக சென்று கொண்டிருந்த ரோவ்மென் போவலை பால்டு செய்தது பும்ராதான் நேற்று ஆட்ட நாயகன்.

டிம் டேவிட் ரிவியூ செய்யாதது பேசுபொருள் ஆன சூழலில் பும்ராவின் அட்டகாசமான பந்து வீச்சு திரைக்குப் பின்னால் சென்று விட்டது. இந்தப் போட்டியை ஆர்சிபி அணியினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்தனர். ஒட்டுமொத்த அணியும் மேட்சை பார்த்த வீடியோவை ஆர்சிபி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு வித்திட்ட டிம் டேவிட் கூறும்போது, ​​’சனிக்கிழமை காலையே எனக்கு ஃபாப் டுபிளெசிஸ் இடமிருந்து மெசேஜ் வந்தது இவர், கோலி, மேக்ஸ்வெல் ஆகியோர் மும்பை கிட் உடன் இருந்தனர், நான் அதை இன்ஸ்டாகிராமில் பின்னால் பகிர்கிறேன்’ என்றார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube