வீட்டின் இரும்பு தடுப்புகளை ஏற்றி குதித்த 3 கரடிகள்… பூஜைக்காக வைத்திருந்த எண்ணையை குடித்து விட்டு எஸ்கேப் – வெளியான சிசிடிவி காட்சிகள்


நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வீட்டின் இரும்பு தடுப்புகளை ஏறி குதித்த 3 கரடிகள் , பூஜைக்காக வைத்திருந்த எண்ணையை குடித்து விட்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கரடிகள் நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி உள்ள மிளிதேன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் வனப்பகுதி அருகில் உள்ளது. இந்த பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலை அப்பகுதியைச் சோந்த வக்கீல் பாண்டியனார் வீட்டின் இரும்பு தடுப்புகளைத் தாண்டி 3 கரடிகள் அடுத்தடுத்து தாவி குதித்து உள்ளே புகுந்தன.

அங்கு வாயிலில் சாமி படங்கள் முன்பு எண்ணை ஊற்றி விளக்கேற்றப்பட்டு இருந்தது. அந்த எண்ணையை குடித்த 3 கரடிகளும் மீண்டும் இரும்பு தடுப்பை தாண்டி குதித்து சர்வசாதாரணமாக அங்கிருந்து சென்றன.

வீட்டில் இருந்த சிசிடிவி கேமிராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. காலையில் காமிராவை பார்த்த வக்கீல் பாண்டி குடும்பத்தினர் வீட்டுக்குள் கரடிகள் வந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் படிக்கவும் | மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு… டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே தண்ணீர் திறக்க வாய்ப்பு

அடிக்கடி ஊருக்குள் வந்து செல்லும் கரடிகளால் குடியிருப்புவாசிகள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி வரும் கரடிகளை கூண்டு வைத்துப்பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் : குருசாமி சுப்பிரமணியம்

வெளியிட்டவர்:சங்கரவடிவு ஜி

முதலில் வெளியிடப்பட்டது:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube