வெளியானது விக்ரம்..! கமல்ஹாசன் ரசிகர்கள் கொண்டாட்டம் / Kamal haasan vikram Directed by Lokesh kanagaraj stars Vijay Sethupathi, Fahadh Faasil with Kalidas Jayaram Narain Antony Varghese and Arjun Das – News18 Tamil


நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இன்று வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

க்ளைமேக்ஸ் காட்சியின்போது சூர்யா படத்தில் இடம்பெறுவார் என்றும், இந்த காட்சி விக்ரம் படத்தின் அடுத்த பாகங்களுக்கு லீடாக அமையும் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இதனால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியானது. விக்ரம் படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கமல் ஹாசனை திரையில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கமல் ரசிகர்கள் பதிவு செய்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல் திரைப்படம் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு விக்ரம் திரைப்பட சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வெளியிட்டவர்:ராம்பிரசாத் எச்

முதலில் வெளியிடப்பட்டது:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube