பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கீழ் செயல்படும் பெல்காம் கண்டோன்மெண்ட் போர்டில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | கல்வி | சம்பளம் |
சுகாதார ஆய்வாளர் | 1 | 10 வகுப்பு தேர்ச்சி மற்றும் டிப்ளமோ | ரூ.30,350-58,250/- |
உதவி சுகாதார ஆய்வாளர் | 1 | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிப்ளமோ அல்லது 3 இல் இருந்து 2 வருட அனுபவம் | ரூ.23,500-47,650/- |
மாலி | 2 | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் படிப்பு | ரூ.17,000-28,950/- |
சௌகிதார் | 2 | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி | ரூ.17,000-28,950/- |
சஃபைவாலா | 8 | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி | ரூ.17,000-28,950/- |
காவலாளி | 2 | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி | ரூ.17,000-28,950/- |
மஸ்தூர் (வத்தர் கூலி) | 2 | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி | ரூ.17,000-28,950/- |
மருத்துவச்சி | 1 | டிப்ளமோ மற்றும் பதிவு செய்திருக்க வேண்டும் | ரூ.17,000-28,950/- |
உயர்நிலைப் பள்ளி உதவி ஆசிரியர் | 1 | ஹிந்தி மொழியுடன் கூடிய கலை பட்டம் மற்றும் பி.எட் | ரூ.33,450-62,600/- |
தச்சர் | 1 | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சான்றிதழ் படிப்பு | ரூ.18,600-32,600/- |
இளைய பொறியாளர் | 1 | சிவில் இன்ஜீனியரிங் பிரிவில் டிப்ளமோ | ரூ.33,450-62,600/- |
வயது வரம்பு :
அனைத்து காலிப்பணியிடங்களுக்கும் குறைந்தது 21 வயதில் இருந்து 30 வயது வரை இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கான விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://belgaum.cantt.gov.in/recruitment என்ற இணையத்தள அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: https://belgaum.cantt.gov.in/recruitment/
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
தலைமை நிர்வாக அதிகாரி, கண்டோன்மென்ட் போர்டு, BC எண்.41, கானாபூர் சாலை, முகாம், பெலகாவி-590001
முக்கிய நாட்கள்:
நிகழ்வுகள் | தேதி |
ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் | 02.12.2022. |
உதவி துப்புரவு ஆய்வாளர், மாலி, சௌகிதார், சஃபாய்வாலா, வாட்ச்மேன், மஸ்தூர்(வதர் கூலி) பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் | 08.12.2022. |
மருத்துவச்சி, மஸ்தூர் (வத்தர் கூலி)OBC பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் | 14.12.2022 |
சானிடரி இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் | 19.12.2022. |
உயர்நிலைப் பள்ளி உதவி ஆசிரியர், தச்சு பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் | 21.12.2022. |
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.