மென்மேலும் அதிகரிப்பு  | தமிழகத்தில் புதிதாக 195  பேருக்கு கரோனா பாதிப்பு | Today 195 new peoples affected by Corona in Tamil Nadu


சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 106, பெண்கள் 89 என மொத்தம் 195 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 95 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 56,512 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 17,466 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 101 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 1,021 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 144 ஆகவும், சென்னையில் 82 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று பாதிப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, இன்று தேச அளவில் அன்றாட கரோனா பாதிப்பு 5000-ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,233 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் இதுவரை மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,90,282 என்றளவில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 3,345 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,26,36,710 என்றளவில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழக்க இதுவரை இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. அடுத்தபடியாக கேரளா, டெல்லி, ஹரியாணா, கர்நாடகா, தமிழகம், தெலங்கானா, உத்தரப்பிரதேசத்தில் தொற்று அதிகமாக இருக்கிறது.

Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube