ஒவ்வொரு ஆண்டும், அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது.
இந்த கல்வியாண்டுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி – 23 ஏப்ரல் மாலை 4 மணி.
கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு பதிவு எண் /பன்னிரென்டாம் வகுப்பு (அதற்கு இணையான கல்வித்தகுதி) பதிவு எண் /சாதிக் சான்றிதழ்/ இருப்பிடச் சான்றிதழ்/ மின்னஞ்சல் முகவரி/ தொலைபேசி எண்/ பிறந்த தேதி போன்ற விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
AI-ல் முதுகலை பட்டப்படிப்பு வழங்கும் ஜியோ கல்வி நிறுவனம் – விண்ணப்பிப்பது எப்படி?
புகைப்படம், குறிப்பிட்ட ஆவணங்கள் மற்றும் கையொப்பம் இல்லாமல் அனுப்பப்படும் இணையவழி விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
இணையவழி விண்ணப்பத்தில் சில தளங்கள் திருத்த இயலாது. எனவே, விண்ணப்பதாரர்கள் மிகுந்த கவனத்துடன் விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர்களின் விவரங்கள் இறுதியானவையாகக் கருதப்படும். இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு திருத்தம் கோரி . பெறப்படும் எந்தவொரு கோரிக்கையும் பரிசீலிக்கப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு Tamil Nadu Common Entrance Test (TANCET) 2022
உடனடியாக விண்ணப்பியுங்கள்:
கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும்போது, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.
12-ம் வகுப்பு தேர்வில் காங்கிரஸ் கட்சியை புகழ்ந்து 6 கேள்விகள்- ராஜஸ்தான் எதிர்க்கட்சிகள் கண்டனம்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.