இதுகுறித்து, மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி படிப்பில் இணைவதற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டுதல்படி பி.ஏ பி.எட் / பி.எஸ்சி. பி. எட்/ பிகாம் பி. எட் ஆகிய படிப்புகள் மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் சோதனை அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட உள்ளன. இந்தப் படிப்புகளில் இணைவதற்கான நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது.
கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (National Council for Teacher Education ) தேசிய கல்விக் கொள்கை 2020 இன் படி இதற்கான பாடத்திட்டத்தை வகுத்துள்ளது. இதில் ஒரு மாணவர் ஆசிரியர் கல்வியோடு சேர்த்து தனக்கு வேண்டிய கணிதம், அறிவியல், கலை, பொருளாதாரம் அல்லது வணிகம் ஆகிய சிறப்புத் துறைகளில் பட்டம் பெற உதவுகிறது. இந்த ஒருங்கிணைந்த படிப்பானது அதிநவீன கற்பித்தலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல், உள்ளடக்கிய கல்வி மற்றும் இந்தியா மற்றும் அதன் மதிப்புகள்/நெறிமுறைகள்/கலை/மரபுகள் பற்றிய புரிதல் ஆகியவற்றிலும் ஒரு அடித்தளத்தை நிறுவும்.
கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (அங்கீகாரம், விதிமுறைகள் மற்றும் நடைமுறை) திருத்த விதிமுறைகள், 2021ஐப் பார்க்கவும். மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள்/ கல்வி நிறுவனங்கள் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி கல்வி அங்கீகாரம் பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை மே 1 ஆம் தேதி முதல் மே 31 (இரவு 11:59 மணி வரை) சமர்ப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு https://ncte.gov.in/ITEP என்ற இணைப்பை பார்வையிடவும்.
இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், https://ncte.gov.in/ITEP/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-20893266(L), 20893267(L) என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். recognition@ncte-india.org என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.
இதையும் வாசிக்க:
நெட் தேர்வுக்கான விண்ணப்பம் தொடங்கியது.. தகுதி, கட்டணம் என்ன?
TANCET Exam Admit Card : 2022 டான்செட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது..!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.