கோடை காலத்தில் இந்த டீ-க்கு ஏன் மாற வேண்டும்.?
உங்கள் டீ-யில் பெருஞ்சீரகம் சேர்ப்பதால் கோடை காலத்திலும் டீ-யின் அற்புத சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பெறலாம். கோடையில் இஞ்சி, மசாலா போன்ற பிற பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட டீ உடல் சூட்டை அதிகரித்து வயிறு, வீக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்படுத்தலாம். இருப்பினும் உங்கள் டீயில் ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகத்தைச் சேர்த்துக் கொண்டால், அது உடல் சூட்டை உடனடியாகத் தணிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக பெருஞ்சீரகத்தில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், சோடியம் அதிகம் உள்ளன. மேலும் உடலில் ஊட்டச்சத்துக்களின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
கோடையில் பெருஞ்சீரக டீ குடிப்பதற்கான காரணங்கள் இங்கே…
கல்லீரல் மேம்படுத்துகிறது:
பெருஞ்சீரகம் விதைகளில் நிறைந்துள்ள செலினியம் எனவே கல்லீரலில் இருந்து நச்சுகளை அகற்றி உடலின் சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது. எனவே பெருஞ்சீரக டீ குடிப்பது கல்லீரலின் நச்சுத்தன்மையை நீக்கி அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பெருஞ்சீரகம் விதைகளின் குளிர்ச்சியான பண்புகள் கல்லீரலை ஆரோக்கியமாக்குகிறது.
எடை குறைப்பில்..
எடை இழக்கும் முயற்ச்சியில் இருப்பவர்களுக்கு பெருஞ்சீரக டீ நல்ல பலன்களை தரும். எடையை எளிதாக குறைக்க மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு படிவதை குறைக்க உதவும். பெருஞ்சீரகத்தில் டயட்டரி ஃபைபர்ஸ் இருப்பதால் செரிமான செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது. பெருஞ்சீரகம் செரிமான நொதிகளை வெளியிடுவதால் செரிமான செயல்பாட்டின் போது கொழுப்பு மூலக்கூறுகளை எரிக்க உதவுகிறது. வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்துள்ளது. இவை எடை இழப்பிற்கு உதவுகிறது.
Bowl Method Diet பற்றி தெரியுமா..? உடல் எடையை வேகமாக குறைக்க இப்போ இதுதான் டிரெண்ட்..!
பார்வைத்திறன்..
பெருஞ்சீரக டீ உடலில் வைட்டமின் ஈ-வை தூண்டுவதன் மூலம் பார்வையை மேம்படுத்துகிறது. பெருஞ்சீரகத்தில் வைட்டமின் ஈ மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளன, இவை கண்பார்வையை மேம்படுத்த உதவுகின்றன. இரவு நேரங்களில் இந்த டீ குடிப்பது நரம்பு தளர்வு பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.
தூக்கத்தை தூண்டும் டீ..
தூங்கும் முன் பெருஞ்சீரக டீ குடிப்பது மெலடோனின் சுரக்க உதவுகிறது. இது நரம்பு மண்டலத்தை தளர்த்த, தூக்கத்தை தூண்ட உதவும். ஆரோக்கியமான தூக்கம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்தவும் உதவுகிறது.
உடல் அழற்சியை குறைக்கிறது..
வெதுவெதுப்பான ஒரு கப் பெருஞ்சீரக டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும். மேலும் இந்த டீ செல் மீளுருவாக்கத்திற்கும் உதவுகிறது.
ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க..
பெருஞ்சீரக டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. பெருஞ்சீரகத்தில் உள்ள நைட்ரேட்டுகள், சோடியம் மற்றும் பொட்டாசியம் இயற்கையாகவே உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் சமநிலைப்படுத்தவும் உதவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.