புதிய டிவிஎஸ் ஐக்யூப் எக்ஸ்டி இ-ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்!! டெலிவிரி ஆகஸ்ட்டில்!

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் ஒன்றாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது. டிவிஎஸ் பிராண்டில் இருந்து முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக கடந்த 2020இன் துவக்கத்தில் ஐக்யூப் மாடல் களமிறக்கப்பட்டது.

புதிய டிவிஎஸ் ஐக்யூப் எக்ஸ்டி இ-ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்!! டெலிவிரி ஆகஸ்ட்டில் இருந்து!

இந்த நிலையில் சமீபத்தில் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிக-ரேஞ்ச் வெர்சனாக ஐக்யூப் எக்ஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளும் ரூ.999 என்கிற முன்தொகை உடன் அப்போதே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் துவங்கப்பட்டன. ஆனால் முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி எப்போது துவங்கப்படும் என்பது அறிவிக்கப்படமாலேயே இருந்தது.

புதிய டிவிஎஸ் ஐக்யூப் எக்ஸ்டி இ-ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்!! டெலிவிரி ஆகஸ்ட்டில் இருந்து!

இந்த நிலையில் தற்போது ஐக்யூப் எக்ஸ்டி பைக்குகளின் டெலிவிரிகள் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து துவங்கவுள்ளதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ஐக்யூப் எக்ஸ்டி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எங்களுக்கு தெரிந்தவரையில், 2022 ஐக்யூப் எக்ஸ்டி மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.30 லட்சமாக நிர்ணயிக்கப்படலாம்.

புதிய டிவிஎஸ் ஐக்யூப் எக்ஸ்டி இ-ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்!! டெலிவிரி ஆகஸ்ட்டில் இருந்து!

தற்சமயம் ஐக்யூப் ஆரம்ப-நிலை ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.99,130 ஆகவும், அதற்கடுத்த எஸ் வேரியண்ட்டின் விலை ரூ.1.09 லட்சமாகவும் உள்ளன. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையே மத்திய அரசின் ஃபேம்-2 திட்டத்தின்படி மானியங்களை பெற்றால், டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மேலும் குறைந்த விலையில் வாங்கலாம்.

புதிய டிவிஎஸ் ஐக்யூப் எக்ஸ்டி இ-ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்!! டெலிவிரி ஆகஸ்ட்டில் இருந்து!

சரி மீண்டும் புதிய நீண்ட-ரேஞ்ச் ஐக்யூப் எக்ஸ்டி வேரியண்ட்டிற்கு வருவோம். இந்த புதிய வேரியண்ட்டில் அளவில் சற்று பெரிய 4.56kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இது நார்மல் மோடில் 110கிமீ ரேஞ்சையும், நார்மல் மோடில் அதிகப்பட்சமாக 145கிமீ ரேஞ்சையும் வழங்கும் என்கிறது டிவிஎஸ். அதாவது பேட்டரியை முழு சார்ஜ் செய்து கொண்டு நார்மல் மோடில் ஸ்கூட்டரை சுமார் 145கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

புதிய டிவிஎஸ் ஐக்யூப் எக்ஸ்டி இ-ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்!! டெலிவிரி ஆகஸ்ட்டில் இருந்து!

அதுவே ஐக்யூப் மாடலின் மற்ற 2 வேரியண்ட்களில் 3.04kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பே பொருத்தப்படுகிறது. ஆனால் இந்த 3 வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியான 4.4kW BLDC ஹப் மவுண்டட் எலக்ட்ரிக் மோட்டாரே வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 4 பிஎச்பி மற்றும் 33 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. ஐக்யூப் எக்ஸ்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக 82kmph வேகத்தில் செல்ல இந்த இயக்க ஆற்றல் போதுமானதே.

புதிய டிவிஎஸ் ஐக்யூப் எக்ஸ்டி இ-ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்!! டெலிவிரி ஆகஸ்ட்டில் இருந்து!

இதன் பேட்டரியை 950-வாட் சார்ஜரின் மூலம் 0-இல் இருந்து 100% சார்ஜ் நிரப்ப 4 மணிநேரங்கள் 6 நிமிடங்களும், 1500-வாட் சார்ஜரின் மூலம் 2.30 மணிநேரங்களும் தேவைப்படுமாம். விற்பனையில் டிவிஎஸ் ஐக்யூப்பிற்கு பஜாஜ் சேத்தக் மற்றும் ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போட்டியாக விளங்கிவரும் நிலையில், இதன் புதிய நீண்ட-ரேஞ்ச் எஸ்டி வேரியண்ட்டிற்கு ஓலா எஸ்1 ப்ரோ மற்றும் ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போட்டியாக விளங்கவுள்ளன.

புதிய டிவிஎஸ் ஐக்யூப் எக்ஸ்டி இ-ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்!! டெலிவிரி ஆகஸ்ட்டில் இருந்து!

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், புதிய ஐக்யூப் எக்ஸ்டி இ-ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்புடன் 7-இன்ச் திரை இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்இடி ஹெட்லேம்ப் & டெயில்லேம்ப், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், சாவி இல்லா ஸ்டார்ட், க்ரூஸ் கண்ட்ரோல், டயரின் அழுத்தத்தை அளவிடும் அமைப்பு உள்ளிட்டவற்றை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வழங்கியுள்ளது.

புதிய டிவிஎஸ் ஐக்யூப் எக்ஸ்டி இ-ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்!! டெலிவிரி ஆகஸ்ட்டில் இருந்து!

ஆனால் ஐக்யூப்-இன் மற்ற 2 வேரியண்ட்களில் 5-இன்ச் திரையே வழங்கப்பட்டுள்ளது. இருக்கைக்கு அடியில் பொருட்களை வைக்க இரு முழு ஹெல்மெட் அளவிற்கு இடவசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ஐக்யூப் எக்ஸ்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அடர் நீலம், சாண்ட், மேட் அலுமினியம் மற்றும் மேட் க்ரே என மொத்தம் 4 விதமான நிறத்தேர்வுகளில் தேர்வு செய்யலாம்.

புதிய டிவிஎஸ் ஐக்யூப் எக்ஸ்டி இ-ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்!! டெலிவிரி ஆகஸ்ட்டில் இருந்து!

சஸ்பென்ஷனுக்கு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டாரின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சுமார் 85 நகரங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. தமிழகத்தில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள டீலர்ஷிப் ஷோரூம்கள் வாயிலாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யலாம்.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube