2035ம் ஆண்டிற்குப் பிறகு பெட்ரோல் / டீசல் வாகனங்களுக்குத் தடை… திடீரென பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

புவி வெப்ப மயமாகுதல் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது இந்த பூமியில் மனிதர்கள் பயன்படுத்தப்படும் பொருட்களிலிருந்து வெளியேறும் கார்பன் இந்த பூமியைச் சூடாக்கிக் கொண்டே இருக்கிறது. இதனால் பூமியின் வெப்பநிலை மாற்றம், நீர்த்தேவை அதிகரிப்பு, நீர் மாசு, உள்ளிட்ட பல விஷயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறது. இப்படியாக இயற்கை நமக்குத் தந்தை வளங்களை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு சிக்கனமாகவும், தேவை தகுந்தார் போல் அளவாகவும் பயன்படுத்துகிறோமோ அவ்வளவு நாம் பூமியின் ஆயுள் நீடிக்கும்.

2035 ம் ஆண்டிற்குப் பிறகு பெட்ரோல் / டீசல் வாகனங்களுக்குத் தடை . . . திடீரென பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் !

இப்படியாகப் பூமி வெப்ப மயமாகுதலுக்கு முக்கியமான காரணம் வாகனங்களில் பயன்பாடுதான். வாகனங்களிலிருந்து வெளியிடும் புகை இந்த சுற்றுச்சூழல் கலந்து மாசு ஏற்படுகிறது இதனால் உலக நாடுகள் முழுவதும் மாசை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயற்சி செய்து வருகிறது. அதன்படி அடுத்த சில ஆண்டுகளுக்குள் மாசுவை வெகுவாக குறைக்க வேண்டும் என எல்லா நாடுகளும் அவர்களுக்குத் தந்த முயற்சியைச் செய்து வருகிறது.

2035 ம் ஆண்டிற்குப் பிறகு பெட்ரோல் / டீசல் வாகனங்களுக்குத் தடை . . . திடீரென பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் !

இந்தியாவைப் பொருத்தவரை மாசுக் கட்டுப்பாட்டிற்காக பாரத் ஸ்டாண்டர்டு என்ற அளவுகளை நிர்ணயம் செய்யும் அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் மாசு ஏற்படும் விஷயங்களைக் கண்டறிந்து அதற்கான கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து மாசுவை குறைக்க வழி வகை செய்கிறது. வாகனங்களுக்கான மாசு பொருத்தவரை BS VI -ல் தற்போது இந்தியா இருக்கிறது. இதன்படி வாகன தயாரிப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு கொண்ட இன்ஜின் எவ்வளவு மாசுவை வெளியிடவேண்டும் என் கட்டுப்பாடு விதிக்கிறது.

2035 ம் ஆண்டிற்குப் பிறகு பெட்ரோல் / டீசல் வாகனங்களுக்குத் தடை . . . திடீரென பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் !

வாகன தயாரிப்பு நிறுவனங்களும் அதற்குத் தந்தார் போல இன்ஜின்களை தயாரித்து வருகின்றனர். ஆனால் புகைகளை உமிழாத வகையில் எலெக்டரிக் வாகனங்கள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இந்த வாகனங்களைப் பொருத்தவரை சுற்றுச்சூழலுக்கு நேரடியாக எந்த மாசும் ஏற்படுத்தாது. அதனால் இந்த வாகனங்களை அதிகம் விற்பனை செய்ய உலகம் முழுவதும் உள்ள அரசுகள் முயற்சி செய்து வருகிறது.

2035 ம் ஆண்டிற்குப் பிறகு பெட்ரோல் / டீசல் வாகனங்களுக்குத் தடை . . . திடீரென பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் !

எல்லா விதமான வாகனங்களிலும் எலெக்ட்ரிக்கை கொண்டு வர பெரும் முயற்சி எடுக்கப்படுகிறது. இந்தியாவிலும் எலெக்டரிக் வாகனங்களுக்கான மானியங்கள், வரி குறைப்பு உள்ளிட்ட பல விஷயங்களை அரசு முயற்சி செய்து வருகிறது. உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க அந்த அந்த நாட்டு அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

2035 ம் ஆண்டிற்குப் பிறகு பெட்ரோல் / டீசல் வாகனங்களுக்குத் தடை . . . திடீரென பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் !

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் சமீபத்தில் ஒரு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி வரும் 2035ம் ஆண்டிற்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் போன்ற கம்பஷன் இன்ஜினை பயன்படுத்தும் வாகனங்களை விற்பனை செய்யத் தடை கொண்டு வர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அவ்வாறான இன்ஜின் பயன்பாடுகளுக்கு மாற்ற விஷயங்களை மக்கள் பயன்பாட்டிற்குக்கொண்டு வரவேண்டும் என்பதே இந்த தீர்மானத்தின் நோக்கம்.

2035 ம் ஆண்டிற்குப் பிறகு பெட்ரோல் / டீசல் வாகனங்களுக்குத் தடை . . . திடீரென பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் !

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் பொருத்தவரை தற்போது வாகனங்கள் மூலம் வெளியாகும் மாசுவை 2030ம் ஆண்டிற்குள் 50 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் 100 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பதால் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 339 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 249 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தீர்மானத்தின் போது 24 உறுப்பினர்கள் வரவில்லை.

2035 ம் ஆண்டிற்குப் பிறகு பெட்ரோல் / டீசல் வாகனங்களுக்குத் தடை . . . திடீரென பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் !

இந்த முடிவு பல நாடுகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளனர். இந்த முடிவு பலர் எதிர்பார்த்ததுதான் என்றாலும் இதற்கான முதல் தீர்மானத்தை யார் போடுவார்கள் எனப் பல நாடுகளும் எதிர்நோக்கி வந்த நிலையில் ஐரோப்பா ஒன்றியமே இதற்கான முன்னுதாரணமாக இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இது போன்ற தீர்மானங்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அடுத்தடுத்து கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2035 ம் ஆண்டிற்குப் பிறகு பெட்ரோல் / டீசல் வாகனங்களுக்குத் தடை . . . திடீரென பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் !

இப்படிப்பட்ட முடிவை அரசு எடுத்தால் நாம் இன்று பயன்படுத்தி வரும் பெட்ரோல்/டீசல் வாகனங்களை எல்லாம் எதிர்காலத்தில் மியூசித்தில் தான் பார்க்க வேண்டும். மக்கள் பயன்பாட்டில் மின்சார வாகனம் போன்ற மாற்று எரிபொருள் வாகனங்களின் பயன்பாடு மட்டுமே இருக்கும். இனி பெட்ரோல் டீசல் வாகனங்களையும் பார்த்த கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம்.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube