பிரபல இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அட்டகாசமாக வெளியாகியுள்ள இந்த டீசரில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கான் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த படத்தின் டைட்டில் ஏற்கனவே வெளியான தகவலின்படி ‘ஜவான்’ என்று வைக்கப்பட்டுள்ளது இந்த டீசரில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில் பிரியாமணி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும், யோகி பாபு உள்ளிட்ட பல தமிழ் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து வருவது தெரிந்ததே.
எப்பொழுது @iamsrk மற்றும் @atlee_dir ஒன்றாக வாருங்கள், இது உங்கள் மனதைக் கவரும் ??
ஆக்ஷன் எண்டர்டெயினருக்கு தயாராகுங்கள் #ஜவான்ஜூன் 2, 2023 அன்று திரையரங்குகளில்!https://t.co/xMsMCKODFkஇந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.@கௌரிகான் @வெங்கி மைசூர்
— ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் (@RedChilliesEnt) ஜூன் 3, 2022