நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன் என நடிகை அளித்துள்ள பாலியல் புகார் குறித்து போலீசாரிடம் பிரபல நடிகர் வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள நடிகை ஒருவர், நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் துறையில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், விஜய்பாபு ஆஜராக சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் திரும்பிய நடிகர் விஜய் பாபு போலீசார் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அப்போது ‘என் மீது புகார் கூறிய நடிகையை எனக்கு முன்பே தெரியும் என்றும், அடிக்கடி அவர் என் வீட்டிற்கு வருவார் என்றும், அவருடைய சம்மதத்துடன் தான் இருவரும் உறவு கொள்கிறோம் என்றும் கூறினார்.
எனது படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தாலும் எனது தொழில் எதிரிகள் தூண்டிவிட்டாலும் தான் நடிகை புகார் கொடுத்துள்ளார் இந்த வழக்கு தொடர்பாக போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்’ என்றும் கூறியுள்ளார்.
மேலும் போலீஸ் விசாரணையின் போது நடிகையுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் போலீசாருக்கு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.