நடிகர் பரத்திற்கு இந்த ஆண்டு மட்டும் 5க்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த குரூப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
மலையாளத்தில் வெளியான இந்த படத்தில் இசாக் என்ற கேரக்டரில் பரத் நடித்திருப்பார். அதற்கு முன்பு தமிழில் வெளியான த்ரில்லர் திரைப்படமான காளிதாசும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆர் மாதவன்: ஹே ஹேன்ட்சம்… நடிகர் மாதவனின் கிளிக்ஸ்!
இந்நிலையில் அடுத்ததாக பரத் நடிகை வாணி போஜனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு மிரள் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
வெளியிட்டதில் மகிழ்ச்சி #மிரால்_ஃபர்ஸ்ட்லுக் மற்றும் #மோஷன் போஸ்டர் ஸ்லாஷர் த்ரில்லர் – #மிரால் 👍
இணைப்பு – https://t.co/uSvUOC4oz5
வாழ்த்துகள் @nameissakthi மற்றும் குழு@AxessFilm @Dili_AFF @SakthiFilmFctry @sakthivelan_b @பாரத் @vanibhojanoffl @ ksravkumardir @இட்ஸ்பூரணேஷ் @சேது_சினி
— சிவகார்த்திகேயன் (@Siva_Kartikeyan) ஜூன் 1, 2022
மிரள் படத்தில், கே.எஸ். ரவிக்குமார், மிரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தென்காசி, அம்பாசமுத்திரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் மிரள் படத்தின் ஷூட்டிங் முடிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் தெரியுமா?
பரத் தற்போது மலையாளத்தில் 6 ஹவர்ஸ், சமரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
தமிழில் 8, லவ், முன்னறிவான் ஆகிய படங்களில் பரத் நடிக்கிறார். தெலுங்கில் சுதீர் பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் பரத் இடம்பெற்றுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.