“உங்களுடன் திரையில் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவானது” என ‘விக்ரம்’ கமலுடன் நடித்தது குறித்து நடிகர் சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று (ஜூன் 3) திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘விக்ரம்’ திரைப்படம்.
அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் திரையரங்கு ஆரவரத்தால் நிரம்பிவிடுகிறது. ஆரம்பத்தில் சூர்யா நடிப்பை வெளியிடாமல் சஸ்பென்சாக வைத்திருந்தது படக்குழு,
ஆனால், இது தொடர்பான செய்திகள் தீயாய் பரவியதும் படத்தில் சூர்யா நடிப்பை ஒப்புக்கொண்டனர். அவர் நடிப்பதாக தெரிவித்திருந்தாலும், எந்தக் கதாபாத்திரத்தில் எப்போது வருவார் என்பது குறித்த ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகமாவே இருந்தது. படத்தை பார்த்தவர்கள் சூர்யா வரும் காட்சிகளுக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனுடன் நடித்தது குறித்து தனது மகிழ்ச்சியை சூர்யா வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”அன்பான கமல்ஹாசன் அண்ணா, எப்படி சொல்றது? உங்களுடன் திரையில் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவானது. இதை சாத்தியப்படுத்திய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. அன்பைக்கண்டு மகிழ்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அன்பே @ikamalhaasan அண்ணா எப்படி சொல்றது…!?
உங்களுடன் திரையுலகில் வருவது கனவு நனவாகும்..!
இதைச் செய்ததற்கு நன்றி! @Dir_Lokesh அத்தனை அன்பையும் கண்டு நிரம்பி வழிகிறது!! #ரோலக்ஸ் #விக்ரம்— சூரிய சிவகுமார் (@Suriya_offl) ஜூன் 4, 2022