உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதனைத் தொடர்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் மைதிலி. இதுபற்றிய தகவல் பஞ்சகுட்டா காவல் நிலையத்திற்கு கிடைத்துள்ளது. இதையடுத்து மைதிலியின் தொலைபேசி சிக்னலை வைத்து அவரது வீட்டில் இருப்பதை கண்டறிந்து உடனடியாக போலீசார் அங்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் மைதிலி சுயநினைவற்ற நிலையில் கிடந்த மைதிலியை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் போலீசார்.
கடந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் தனது கணவர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் 4 பேருக்கு எதிராக துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார் மைதிலி. இந்த வழக்கில் தற்போது முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது.
இதேபோன்று சூரியபேட்டை மாவட்டத்தில் உள்ள மோதி காவல் நிலையத்திலும், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மைதிலி புகார் அளித்துள்ளார். இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை மைதிலி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.