நடிகை நமீதா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக உள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவை தற்போது வைரலாகி வருகிறது.
அஜித் நடித்த ‘பில்லா’ விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை நமீதா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரான வீரேந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் அவர் நடிப்பில் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமான நமீதா அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரெக்னெண்ட் போட்டோஷூட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.