வாரணவாசி ஊராட்சியில் வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்


வாலாஜாபாத்,: வாலாஜாபாத் ஒன்றியம் வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். கால்நடைத்துறை, வேளாண்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  இதில், கிராம மக்கள் வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விவசாயிகளுக்கு கிசான் அட்டை வழங்க வலியுறுத்தியும் கிராம மக்கள் மனு வழங்கினர். இந்த மனுக்களை துறை சார்ந்த அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். இதனை பரிசீலனை செய்து தகுந்த  நடவடிக்கை எடுக்கப்படும்.  இந்த முகாமில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏகவள்ளி அண்ணப்பன் மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த, பெண்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube