அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் ஒரே கட்டணம்; ஏஐசிடிஇ திட்டம் | Uniform fee structure for all Engineering Management Colleges


நாடு முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் ஒரே கட்டணத்தை நிர்ணயிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 500 கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 3,500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் அந்தந்த மாநிலங்களில் நிர்ணயிக்கப்படும் கட்டணங்களின் அடிப்படையில் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தற்போதைய கட்டணம்

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு தர ஒப்புதல் இல்லாத படிப்புகளுக்கு ரூ.50,000 மற்றும் தர ஒப்புதல் பெற்ற படிப்புகளுக்கு ரூ.55,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்வாக ஒதுக்கீடு இடங்களாக இருந்தால் முறையே ரூ.85,000 மற்றும் ரூ.87,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டணம் கடந்த 2020-21-ம் கல்வி ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பெருந்தொற்று காரணமாக இக்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் வலியுறுத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் நிர்வாகப் படிப்புகளுக்கு ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(ஏஐசிடிஇ) முயற்சி எடுத்து வருகிறது.

குறிப்பாக, குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று பல கல்லூரிகள் வலியுறுத்தியுள்ளன. பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கின்றன. எனவே, கல்லூரி கட்டணம் உயர்ந்தால் அது மாநில அரசின் நிதிச்சுமையையும் அதிகரிக்கும் என்பதால் மாநில அரசுகள் உயர்த்த மறுக்கின்றன. இதனால் கல்லூரிகள் நிதிப்பற்றாக்குறையில் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே, குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று கல்லூரிகள் சார்பில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு கோரிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஒரே கட்டணத்தை நிர்ணயிக்கும் பரிந்துரையை மத்திய கல்வித்துறையின் ஒப்புதலுக்கு ஏஐசிடிஇ அனுப்பி வைத்துள்ளது. அதன்படி, பொறியியல் படிப்புகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ஆண்டுக்கு ரூ.75,000 முதல் ரூ.85,000 வரை நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எம்பிஏ, எம்சிஏ போன்ற நிர்வாக படிப்புகளுக்கும் இதேபோன்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. மத்திய கல்வித்துறையின் ஒப்புதல் கிடைத்தபின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube