பல ஹீரோக்களே நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்களாக உள்ளனர். சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தங்களின் படத்தை பார்த்து விட்டு பாராட்ட மாட்டாரா? போனில் அழைக்கமாட்டாரா? அவரை சந்திக்க முடியாதா என காத்துக் கிடக்கின்றனர்.
ரஜினிகாந்த் தங்களின் படத்தை பாராட்டி விட்டால் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ரஜினிகாந்தும் தன்னை இம்ப்ராஸ் செய்யும் படங்களை பாராட்ட தவறுவதில்லை. போனிலேயோ அல்லது நேரிலேயோ அழைத்து சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் மாஸ் நடிகரான அஜித்தும் சந்தித்துக்கொண்டதாக போட்டோ ஒன்று வெளியாகி இணையத்தை திணறடித்து வருகிறது. அதில் ஃபார்மல் டிரெஸில் லேட்டஸ்ட் லுக்கில் அஜித்தின் தோளில் கைபோட்டுள்ளார் ரஜினி.
தரமான சம்பவம் ஆன Fake #rajinikanth #ajithkumar https://t.co/Wi2heb9mMm
— பிரேம்ராஜ் அசோகன் (@CinePrem) 1654161902000
இந்த போட்டோ ரஜினியின் வீட்டில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விசாரித்ததில் உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை, அஜித் ரசிகர்கள் பார்த்த வேலைதான் இது என தெரியவந்துள்ளது. இந்த ஃபேக் போட்டோவை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.