விக்ரமன்:டைட்டில் கிடைக்கலனாலும் விக்ரமன் சொன்னத பாருங்க: நெகிழ்ச்சி வீடியோ – bigg boss tamil fame vikraman releases a video


அறம் வெல்லும் எனும் விக்ரமன் வெளியிட்டுள்ள முதல் வீடியோ பிக் பாஸ் பார்வையாளர்களை கவர்ந்துவிட்டது.

அசீம்

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரமன் இறுதி வரை தாக்கிப்பிடித்தார். அறம் வெல்லும், அறம் வெல்லும் என்று சொல்லி வந்த அவருக்கு தான் பிக் பாஸ் 6 டைட்டில் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காததை பிக் பாஸோ, அசீமுக்கு டைட்டிலை கொடுத்துவிட்டார். இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விக்ரமன்.

விக்ரமன்

விக்ரமன்

பிக் பாஸ் வீட்டில் இருந்து தன் வீட்டிற்கு வந்த பிறகு விக்ரமன் வெளியிட்டுள்ள முதல் வீடியோ இது தான். அந்த வீடியோவில் விக்ரமன் கூறியிருப்பதாவது, வணக்கம், உங்கள் அனைவருக்கும் மிகப் பெரிய நன்றியை சொல்லிக்கணும். நீங்கள் எனக்கு எவ்வளவு பெரிய சப்போர்ட் காண்பிப்பீங்க என்பதை வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தான் என்னால் உணர முடிந்தது.

முதல் வீடியோ

அன்பு

அன்பு

விக்ரமன் மேலும் கூறியிருப்பதாவது, அவ்வளவு அன்பும், ஆதரவும், ஆர்கானிக்கா, தன்னெழுச்சியா, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் காண்பிச்சிருக்கீங்க. உங்களுக்கு மிகப் பெரிய நன்றி. ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமானால், பொங்கல் அன்று தாய்மார்கள் அவர்கள் வீட்டு வாசலில் போட்ட கோலத்தில் அறம் வெல்லும் என்பதையும் சேர்த்து போட்டிருக்கிறீர்கள். இதை விட பெரிய வெற்றி நீங்கள் என்றால் எனக்கு கொடுத்துவிட முடியும் என்கிறார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுடைய அன்புக்கு மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்வதற்கு கடமைப்பட்டுள்ளேன். இருந்தாலும் உங்களுடைய மனநிலை என்னவென்பதை நான் உணர்கிறேன். நாம பேசுவோம். இந்த வீடியோ நன்றி சொல்வதற்காக மட்டும் அல்ல. நான் ஒரு விஷயமும் சொல்ல வேண்டும். உங்க எல்லோரையும் சந்திக்கணும்னு ஆசைப்படுகிறேன். அது விரைவில் நடக்கப் போகுது. அது எப்போ என்பதை நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். மறுபடியும் சொல்கிறேன். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. அறம் வெல்லும் என மேலும் தெரிவித்துள்ளார் விக்ரமன்.

விஜய் டிவி

விஜய் டிவி

விக்ரமனுக்கு டைட்டில் கிடைக்காததை பார்த்த பலரும் விஜய் டிவியை விளாசினார்கள். மோசமான ஒருவருக்கு டைட்டிலை கொடுத்த விஜய் டிவியை புறக்கணிக்க வேண்டும் என ட்விட்டரில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசனை விஜய் டிவியில் பார்க்கவும் ஆடியன்ஸ் தயாராகிவிட்டார்கள் என்று சிலர் எடுத்துக் கூறி கிண்டலும் செய்கிறார்கள். இந்நிலையில் தான் விக்ரமன் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube