alzheimer day, 60வது வயதுக்கு மேற்பட்டவர்கள் உஷார். கொரோனா பாதித்த முதியவர்களை தாக்கும் அல்சைமர் – according to a study, adults over the age of 60 who have had corona infection in the past have alzheimers signs


முதியவர்களை தாக்கும் அல்சைமர்

அமெரிக்காவை சேர்ந்த 6.2 மில்லியன் முதியவர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் 50இலிருந்து 80சதவீதம் பேருக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் பலருக்கு முன்னதாகவே வேறு நோய்கள் இருந்திருந்தாலும் கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு இவர்களுக்கு மறதி சார்ந்த அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

94330825

இந்த ஆராய்ச்சியின்படி பிப்ரவரி 2020 முதல் மார்ச் 2021 வரை வித்யாசமான மற்றும் சந்தேகத்திற்குரிய உடல்நல பிரச்சனைகளோடு மருத்துவ சிகிச்சையில் இருந்த 6.2 மில்லியன் முதியவர்களின் பரிசோதனை முடிவுகளை சோதனை செய்து பார்த்துள்ளனர். அதில் முன்னதாக யாருக்கும் அல்சைமர் இருந்ததாக மருத்துவ வரலாறு இல்லை.

முதலில் இவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படாதவர்கள் என இரண்டாக பிரித்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 5.8 மில்லியன் பேர் கொரோனா பாதிக்கப்படாதவர்கள் என்றும், 4,00,000 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களும் ஆவர். அதிலும், 85 மற்றும் அதற்கும் மேல் வயதான பெண்களுக்கு இதில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

​அல்சைமரால் ஏற்படும் பாதிப்புகள்

94330824

அல்சைமர் ஒரு கொடிய மறதி நோய். பலருக்கு தான் யார் என்பதே மறந்து விடும் நிலைக்கு கூட தள்ளும் வாய்ப்பிருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதோ அல்லது ஒரு விஷயத்தை நீண்ட நேரத்திற்கு நியாபகம் வைத்து கொள்வதோ கடினமான காரியம்.

ஏற்கனவே , உலக அளவில் இந்த நோயோடு தொடர்புடைய உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் ஓய்வுநிலை வாழ்க்கைமுறை என பலவற்றை குறைப்பதற்காக மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பட்டியலில் தற்போது கொரோனவும் சேர்ந்திருப்பது மருத்துவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால் இன்னும் முழுமையாக அல்சைமர் நோய்க்கு கொரோனவும் ஒரு காரணம் என்று ஊர்ஜிதமாக முடிவு செய்ய படவில்லை.

​அறிகுறிகள்

94330821

இதன் அறிகுறிகள் நாளாக நாளாக அதிகமாகும் தன்மை கொண்டவை. பிறரை மறத்தல், நிகழ்வுகளை, சின்ன சின்ன விஷயங்களை மறப்பதில் துவங்கி தன்னையே மறக்கும் நிலைக்கு செல்லும் அளவு கொடியது. மேலும் மனநிலையில் மாற்றம், அளவுகடந்த கோபம், முடிவெடுப்பதில் தடுமாற்றம், பதற்றமான மனநிலை என இது ஒரு மனிதரின் மூளை செயல்பாடுகளை வெகுவாக பாதித்து விடும்.

​மருத்துவரை அணுகுதல்

94330820

உங்கள் வீட்டில் உள்ள முதியவர்கள் அல்லது இந்த கட்டுரையை வாசிக்கும் நீங்களே 60 வயதுக்கு மேல் இருந்து உங்களுக்கு கொரோனா தொற்று நீக்கியும் இன்னும் உங்களுக்கு அதன் அறிகுறிகள் இருக்கிறது என்றாலோ, அதோடு சேர்த்து மறதி , நினைவுகளை இழத்தல் போன்ற அறிகுறிகளோ இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

முடிந்தளவு உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு கொரோனா தொற்று பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுங்கள். முதல் தடுப்பூசி முதல் பூஸ்டர் தடுப்பூசி வரை அவர்களுக்கு செலுத்தி விடுங்கள்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube