அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை – News18 Tamil


பொறியியல் கலந்தாய்வு  தொடர்பாக நேரிலோ ,அல்லது www.annauniv.edu இணையதள முகவரியில் மட்டுமே மாணவர்கள் விபரங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் போலியாக வரக்கூடிய அறிவிப்புகளை நம்ப வேண்டாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம்  தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறும் அயல்நாட்டு மாணவர்கள் முன்பணமாக ரூ.5000 செலுத்த வேண்டும் என்றும், முதல் செமஸ்டர் கல்விக் கட்டணத்துடன் ரூ. 1 லட்சம் தற்செயல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற போலியான மின்னஞ்சலை பல்கலைக்கழக நிர்வாகம்  பகிர்ந்தது.

சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஆதாரங்களில் வெளியான இந்த தகவல் போலியானது என அண்ணா பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தியுள்ளது

மேலும், இதுபோன்ற பொய் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும், அனைத்து விண்ணப்பதாரர்கள் மற்றும் பெற்றோர்கள்   கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளமான www.annauniv.edu வெளியிடும் தகவல்களை மட்டும் அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறித்தியுள்ளது.

முன்னதாக, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அட்டவணையை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

2022 -23 பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணை:

விண்ணப்பம் விநியோகம் தொடங்கும் நாள் – 20-06-2022.

விண்ணப்பிக்க கடைசி நாள் / படிவங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் – 19-07-2022.

ரேண்டம் எண் வெளியீடு – 22-07-2022.

சான்றிதழ் சரிபார்ப்பு (TFC) – 20-07-2022 முதல் 31-07-2022 வரை.

தரவரிசை பட்டியல் – 08-08-2022

சிறப்பு கலந்தாய்வு ( மாற்றுத்திறனாளிகள் கலந்தாய்வு, விளையாட்டு வீரர்களின் வாரிசுகள், ராணுவ இடஒதுக்கீடு ) – 16-08-2022 முதல் 18-08-2022.

பொது கலந்தாய்வு – 22-08-2022 முதல் 14-10-2022 வரை.

துணை கலந்தாய்வு – 15-10-2022 முதல் 16-10-2022 வரை.

SC மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு 17-10-2022 முதல் 18-10-2022 வரை.

அக்டோபர் 18 முதல் பொறியியல் கலந்தாய்வு முடிவடைகிறது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube