இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆங்கில இதழியல், இந்தி இதழியல் விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு,ரேடியோ மற்றும் டிவி இதழியல், டிஜிட்டல் மீடியா ஆகியவற்றில் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ஐஐஎம்சியில் என்டிஏ நடத்தும்.
2022 ஐஐஎம்சி சேர்க்கைக்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 18 ஆகும்.
பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் மூலம் நடத்தப்படும். இதுபற்றிய விவரங்கள் விரைவில் ஐஐஎம்சி தகவல் தொகுப்பில் கிடைக்கும்.
ஒடியா, மராத்தி, மலையாளம், உருது ஆகிய மொழிகளில் இதழியல் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு தனித்தனியாக நடைபெறும், இதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஐஐஎம்சி இணையதளமான www.iimc.gov.inல் விரைவில் வெளியிடப்படும்.
சட்ட மாணவர்களுக்கான இண்டர்ன்ஷிப் திட்டம்: LLB படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேலும் விவரங்களுக்கு , விண்ணப்பதாரர்கள் கல்வித்துறை, இந்திய மக்கள் தொடர்பு நிறுவனம், அருணா ஆசஃப் அலி மார்க், புது தில்லி-110067 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண். 011-26742920, 26742940, 26742960 (நீட்டிப்பு 233). மொபைல் எண். 9818005590, (மொபைல் எண். 9871182276 -வாட்ஸ்அப் செய்திக்கு மட்டும்)
இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.