புதுசா பைக் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… இந்த ஜூனில் இந்த பைக்குகள் எல்லாம் களமிறங்குகின்றன!!

டிவிஎஸ் ஸேபெல்லின்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஸேபெல்லின் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. நான்கு வருடங்கள் உருண்டோடிவிட்டாலும், தற்போதுவரையிலும் இந்த க்ரூஸர் பைக்கின் வடிவமைப்பை டிவிஎஸ் மறைமுகமாகவே வைத்துள்ளது.

புதுசா பைக் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த ஜூனில் இந்த பைக்குகள் எல்லாம் களமிறங்குகின்றன!!

டிவிஎஸ் ஸேபெல்லின் இந்த ஜூன் மாதத்தில் சந்தையில் அறிமுகமாகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. 223சிசி என்ஜினை பெற்றுவரும் இந்த க்ரூஸர் பைக்கில் மிக முக்கிய சிறப்பம்சமாக மைல்ட்-ஹைப்ரிட் தொழிற்நுட்பம் புகுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நடக்குமேயானால், மைல்ட்-ஹைப்ரிட் தொழிற்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்படும் முதல் மோட்டார்சைக்கிளாக இது விளங்கும்.

புதுசா பைக் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த ஜூனில் இந்த பைக்குகள் எல்லாம் களமிறங்குகின்றன!!

ராயல் என்பீல்டு ஹண்டர் 350

மீட்டியோர் 350 மற்றும் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்குகளை தொடர்ந்து ஜே-ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையிலான மாடல்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்துவதில் ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரமாக உள்ளது. இதன் எதிரொலியாகவே ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் வெளிவருகிறது.

புதுசா பைக் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த ஜூனில் இந்த பைக்குகள் எல்லாம் களமிறங்குகின்றன!!

நடப்பு ஜூனில் புதிய ராயல் என்பீல்டு ரோட்ஸ்டர் பைக்காக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்ற ஹண்டர் 350-இல் மீட்டியோர் 350 & கிளாசிக் 350-இன் அதே 349சிசி என்ஜினே பொருத்தப்படும். அதிகப்பட்சமாக இந்த என்ஜின் 20 எச்பி & 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இத்துடன் பயண வழிக்காட்டுதல் வசதியுடன் இரட்டை-பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் இந்த புதிய பைக்கில் எதிர்பார்க்கிறோம்.

புதுசா பைக் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த ஜூனில் இந்த பைக்குகள் எல்லாம் களமிறங்குகின்றன!!

பஜாஜ் பல்சர் என்160

கடந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய என்250 மற்றும் எஃப்250 பைக்குகளை தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விரைவில் புதிய பல்சர் என்160 பைக்கையும் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. பெயருக்கேற்ப, இந்த புதிய நாக்டு பல்சர் பைக் தோற்றத்தில், என்250 பைக்கையே பெரிதும் ஒத்து காணப்படும் என கூறப்படுகிறது.

புதுசா பைக் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த ஜூனில் இந்த பைக்குகள் எல்லாம் களமிறங்குகின்றன!!

இதன்படி, இரு-கண்-ஒரு-வாய் ஸ்டைலிலான முன்பக்க ஹெட்லேம்ப் அமைப்பை புதிய என்160-இல் எதிர்பார்க்கலாம். ஆகையால் இது என்250 பைக்கின் அளவில்-சிறிய வெர்சனாகவே காட்சித்தரும். இதனை தொடர்ந்து பல்சர் 150 பைக்கிலும் இத்தகைய அப்டேட்களை பஜாஜ் ஆட்டோ தொடர வாய்ப்புள்ளதாம்.

புதுசா பைக் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த ஜூனில் இந்த பைக்குகள் எல்லாம் களமிறங்குகின்றன!!

டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2

வழக்கமான டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டரின் சிறிய-அளவு வெர்சனாக வி2 மாடல் இந்தியாவில் களம் காண உள்ளது. பனிகளே வி2 பைக்கை போன்று ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்கிலும் அதே 955சிசி சூப்பர்குவாட்ரோ எல்-இரட்டை சிலிண்டர் என்ஜினே பொருத்தப்படுகிறது.

புதுசா பைக் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த ஜூனில் இந்த பைக்குகள் எல்லாம் களமிறங்குகின்றன!!

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 152 பிஎச்பி & 104 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜினை பெற்றுவரும் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.18 லட்சத்தில் இருந்து ரூ.19 லட்சத்திற்குள்ளாக எதிர்பார்க்கிறோம்.

புதுசா பைக் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த ஜூனில் இந்த பைக்குகள் எல்லாம் களமிறங்குகின்றன!!

ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டர்

இந்தியாவை விட்டு சென்றாலும், அடுத்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அதன் பேபி க்ரூஸர் பைக்கான நைட்ஸ்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஜூன் மாதத்திற்கு உள்ளாக அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த பைக் சிபியூ முறையில் அறிமுகப்படுத்தப்படுவதால் விலையினை ரூ.15 லட்சத்தில் எதிர்பார்க்கலாம்.

புதுசா பைக் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த ஜூனில் இந்த பைக்குகள் எல்லாம் களமிறங்குகின்றன!!

நைட்ஸ்டரில் பிராண்டின் புதிய 975சிசி லிக்யுடு-கூல்டு 60-கோண வி-இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 90 எச்பி மற்றும் 95 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் அமைப்பில் சிறந்த எரிபொருள் திறனுக்காக வெவ்வேறான வால்வு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பைக்கின் அதிர்வையும் குறைப்பதாக ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் தெரிவிக்கிறது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube