குதிகால் வெடிப்பினால் அவஸ்தைப்படுகிறீர்களா..? இந்த 4 விஷயங்களை செய்தால் போதும்…


குதிகால்களில் வெடிப்பு ஏற்பட்டால் அவை மிகுந்த அவஸ்தையை உண்டாக்கலாம். பாதங்களை சுற்றியுள்ள தோல் பகுதி தடிமனாகவும் வறண்டும் மாறி மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். இதனை சரி செய்ய வீட்டிலேயே சில இயற்கையான முறைகள் உண்டு.

குதிகால்களில் வெடிப்பு ஏற்படுவது என்பது மிக பெரிய உடல் நலக் கோளாறு எல்லாம் கிடையாது. குறிப்பாக இந்த வயதினருக்கு தான் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டு சொல்லவும் முடியாது. ஆனால் இன்றைய காலத்தில் 30 வயது தாண்டிய பெரும்பாலான மக்களுக்கு குதிகால் வெடிப்பு ஏற்படுகிறது. உண்மையாகவே உடல்நலத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கவில்லை எனினும், சில சமயம் கடுமையான வலியையும் பாதங்களை பார்ப்பதற்கே விகாரமாகவும் இருக்கலாம்.

மேலும் பல சமயங்களில் இதில் கிருமிகளினால் தொற்றுகள் ஏற்படவும், மேலும் செல்லுலிட்டி எனப்படும் தோல் வியாதி ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க அல்லது வந்து விட்டாலும் வீட்டிலேயே சில எளிய முறைகளை பயன்படுத்தி சரி செய்யலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை குதிகால் வெடிப்பிற்கு பயன்படுத்தலாம். இது மிகவும் பயன் தரக்கூடிய அதே சமயத்தில் வீட்டிலேயே செய்யக்கூடிய மிக எளிமையான ஒரு சிகிச்சை ஆகும். ஒரு கப் ஆப்பிள் சாறு வினிகரை எடுத்துக்கொண்டு அதை மிதமாக சூடுபடுத்தப்பட்ட வெந்நீரில் கலந்து உங்கள் பாதத்தை அதனுள் வைக்கவும். ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல் உங்களுக்கு போதுமான நேரம் வரை வைத்திருந்தது அதன் பின் எடுத்து விடலாம். வேண்டுமென்றால் மாய்சுரைசர் உபயோகித்து உங்கள் பாதங்களை மென்மையாக வைத்திருக்கலாம்.

இதையும் படியுங்கள்: வெள்ளரிக்காய் சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா..? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உண்டாகும் தீமைகள்..!

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி குளிர்காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு கிரீம் ஆகும். பொதுவாக ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக உதடுகளில் தடவிக்கொள்ள பயன்படுகிறது. மேலும் இதனை பல பயன் தரக்கூடிய விஷயங்களுக்கும் உபயோகிக்கலாம். அதில் ஒன்றுதான் குதிகால் வெடிப்பு. பெட்ரோல் ஜெல்லியை எடுத்து குதிகால் வெடிப்பு இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். தினமும் தூங்க செல்வதற்கு முன்பு அப்ளை செய்து மறுநாள் கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Honey for lips

தேன்

தேனில் பாக்டீரியாக்களை அழிப்பதற்கு தேவையான பல்வேறு தன்மைகள் உள்ளன. மேலும் இது இயற்கையாகவே ஒரு மாய்சுரைசராக செயல்படுகிறது. சரும பராமரிப்பில் தேன் மிக முக்கிய பங்கை ஆற்றுகிறது. முக்கியமாக குளிர்காலங்களின் போது சருமத்தை அதிக அளவில் பாதுகாக்க உதவுகிறது. இந்த தேனை நாம் குதிகால் வெடிப்பிற்கும் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்: டிஜிட்டல் ஸ்கிரீன்களில் மூழ்கியிருக்கும் உங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

ஒரு கப் தேனை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தப்பட்ட வெண்நீரில் கலந்து உங்களுடைய பாதத்தை அந்த நீரினுள் சிறிது நேரம் வைத்திருங்கள். உங்களுக்கு போதும் என்று தோன்றியதும் காலை வெளியே எடுத்து நன்றாக தேய்த்து கழுவி விட வேண்டும். அதன் பின் சிறிது நேரம் கழித்து உங்கள் பாதங்களில் மாய்சுரைசர் பயன்படுத்தி பாதத்தை மென்மையாக வைத்திருக்கலாம்.

baking soda

பேக்கிங் சோடா

குதிகால் வெடிப்பிற்கு பேக்கிங் சோடாவும் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை மிதமாக சூடுபடுத்தப்பட்ட தண்ணீரில் கலந்து, அதன் பின் சிறிது துண்டுகள் எலுமிச்சையை அதனுள் போட வேண்டும். அதன் பின்பு உங்கள் பாதங்களை நீரினுள் வைத்து குறைந்தபட்சம் 15 வரை வைத்திருக்க வேண்டும். பிறகு கால்களை வெளியே எடுத்து நன்றாக கழுவி குதிகால் வெடிப்பு இருக்கும் இடத்தில் எண்ணெய் அல்லது மாய்சுரைசர் பயன்படுத்தலாம்.

மேலே கூறிய முறைகளில் உங்களுக்கு ஏற்ற முறையை சரியாக கடைபிடித்தவர் குதிகால் வெடிப்பிலிருந்து விடுதலை பெறலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube