நடிகர் விஜய் பற்றி அர்ஜுன் சம்பத் கூறுகிறார் – தமிழ் செய்திகள்


விஜய் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது என்றும் அவர் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரை ஆதீனத்திற்கு மதுரை மாநகர காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் இன்று மதுரை காவல் ஆணையரிடம் மனு அளித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளாலும் சினிமா ரசிகர்களாலும் அச்சுறுத்தப்படுகிறார் என்று கூறினார்.

arjunsampath vijay10062022m

மேலும் விஜய் ரசிகர்கள் ஆதினம் மீது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர் என்றும், அம்மா, அப்பாவை விட விஜய் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது என்றும் விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறவேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை ஆதினம் மதுரையில் நடந்த ஒரு விழாவில் பேசியபோது, ​​’விஜய் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் வசனம் பேசுவதால் அவருடைய படத்தை பார்க்காதீர்கள் என்று கூறினார். அதற்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் போஸ்டர் மூலமும் தங்களது கண்டனத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube