அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா… பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

பிரபல தென்கொரிய வாகன உற்பத்தி நிறுவனமான கியா இந்தியாவில் கால் தடம்பதித்து ஒரு சில ஆண்டுகளே ஆகின்றன. இருப்பினும், இந்நிறுவனம் இந்தியாவில் மிக ஆழமாக காலூன்றியிருக்கின்றது. 2019 ஆம் ஆண்டில் செல்டோஸ் எஸ்யூவி ரக காரை களமிறக்கியதன் வாயிலாக இந்தியாவில் கால் தடம் பதித்தது கியா. இந்த கார் மாடலே நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் கார் மாடல் ஆகும்.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

தற்போது நிறுவனத்தின்கீழ் செல்டோஸ் உடன் சேர்த்து சொனெட், கேரன்ஸ், கார்னிவல் உள்ளிட்ட கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வரிசையிலேயே புதிய மாடலாக கியா நிறுவனம் இவி6 எனும் கார் மாடலை தற்போது இணைத்தியிருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலாகும்.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு இக்காரை கியா விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அறிமுக விலையாக இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காருக்கு ரூ. 59.95 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இக்கார் இரு விதமான வேரியண்டுகளில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

அனைத்து வீல்கள் இயக்கம் கொண்ட தேர்வு மற்றும் ஜிடி பின் வீல் இயக்கம் கொண்ட தேர்வு ஆகிய இரு தேர்வுகளிலேயே கியா இவி6 விற்பனைக்குக் கிடைக்கும். இதில் டாப் ஸ்பெக் மாடலாக அனைத்து வீல் இயக்கம் கொண்ட தேர்வு இருக்கின்றது. இதற்கு ரூ. 64.96 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

கியா நிறுவனம் இந்த காரை இந்தியர்களுக்காக பிரத்யேகாக சிபியூ வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, இதனால்தான் இதன் விலை சற்று அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது. முதல் கட்டமாக நூறு யூனிட்டுகளை மட்டுமே இக்காரை விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுவும், இந்தியாவின் 16 முக்கிய நகரங்களில் மட்டுமே அது விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிறத் தேர்வுகளில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கும். ஆரோரா பிளாக் பேர்ல் (Aurora Black Pearl), ரன்வே ரெட் (Runway Red), ஸ்நோ ஒயிட் பேர்ல் (Snow WHite Pearl), மூன் ஸ்கேப் (Moonscape) ஆகி நிற தேர்வுகளிலேயே மின்சார கார் கிடைக்க இருக்கின்றது.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

கியா நிறுவனம் இந்த மின்சார காரை அதன் எலெக்ட்ரிக் குளோபல் மாடுலர் பிளாட்பாரத்தில் (Electric Global Modular Platform) வைத்தே உருவாக்கியிருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தை பயன்படுத்தியே ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் மின்சார காரும் உருவாக்கப்படுகின்றது. இது மிக சிறந்த மற்றும் மின்சார வாகனங்களின் உருவாக்கத்திற்காக மட்டுமே பிரத்யேகமாக கட்டமைக்கப்பட்ட பிளாட்பாரம் ஆகும்.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

காருக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் பேட்டரிகள் காரின் தரைப் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கின்ற காரணத்தினால் காருக்கு நல்ல புவி ஈர்ப்பு விசை கிடைக்கும் சூழல் உருவாகியிருக்கின்றது. ஆகையால், மிக சிறந்த ஹேண்ட்லிங்கை ரைடர்களால் பெற முடியும்.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

இந்த காரின் தோற்றம் மிகவும் முரட்டுத்தனமானதாகக் காட்சியளிக்கின்றது. அதேவேலையில், மிகுந்த கவர்ச்சியான லுக்கையும் அது கொண்டிருக்கின்றது. இதற்காக பன்முக சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, காரின் கவர்ச்சியான தோற்றத்தை மெருகேற்றும் வகையில் எல்இடி ஹெட்லைட்டுகள், ஹெட்லைட்டுகளுக்கு இடையில் நிலை கொண்டிருக்கும் க்ரில், முன் பக்க பம்பர் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

பம்பர் பகுதியில் வழங்கப்பட்டிருக்கும் இரு பெரிய துளைகள் காற்றை பேட்டரிகள் இருக்கும் இடத்தை நோக்கி பயணிக்க செய்ய வைக்கின்றன. பேட்டரியை கூலாக்கும் பொருட்டு இந்த வசதி காரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், எல்இடி பகல் நேர மின் விளக்குகள், ஃப்ளஷ் ரக கதவு கை பிடிகள், 19 அங்குல அலாய் வீல்கள் உள்ளிட்டவையும் இவி6 காரில் சிறப்பு வசதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

கியா நிறுவனம் இந்த காரை ஒற்றை பேட்டரி பேக் தேர்விலும், இரு விதமான மோட்டார் தேர்விலும் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதாவது, அனைத்து வீல்கள் இயக்கம் கொண்ட தேர்வில் ஓர் விதமான மின் மோட்டாரும், பின் வீல் மட்டும் இயங்கும் வசதியுடன் கிடைக்கும் இவி 6-இல் வேறு விதமான மோட்டாரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

அந்தவகையில், அனைத்து வீல் இயக்கம் கொண்ட தேர்வில் 320 பிஎச்பி மற்றும் 605 என்எம் டார்க்கை வழங்கும் மின் மோட்டாரும், ரியர் வீல் டிரைவ் வசதிக் கொண்ட தேர்வில் 229 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இவையிரண்டும் பேட்டரி பேக் விஷயத்தில் ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

77.4 kWh பேட்டரி பேக் தேர்விலேயே இரு தேர்வுகளும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாகச் சார்ஜ் செய்தால் 528 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் இரண்டாவது கார் மாடல் இதுவாகும்.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ அண்மையில் ஐ4 எனும் செடான் ரக எலெக்ட்ரிக் கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த கார் ஒரு முழுமையான சார்ஜில் 590 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதுவே நாட்டில் சொகுசு வசதிகளுடன் விற்பனைக்கு வந்த முதல் செடான் ரக காரும் ஆகும்.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

இந்த காருக்கு போட்டியளிக்கும் வகையிலேயே கியா இவி6 தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இக்காரை ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டான 350 kW டிசி சார்ஜரில் சார்ஜ் செய்தால் 10-80 சதவீதம் சார்ஜை வெறும் 18 நிமிடங்களிலேயே ஏற்றிக் கொள்ள முடியும். அதேவேலையில், 50 kW சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தோமேயானால் 73 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும். இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் இவி6 விற்பனைக்கு வந்திருக்கின்றது.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

தொழில்நுட்ப வசதிகளாக கியா இவி6 மின்சார காரில் 12.3 அங்குல வளைவான ஸ்டைலில் இரு திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும் செயல்படும். இத்துடன், 14 ஸ்பீக்கர்கள் கொண்ட மெரிடியன் சிஸ்டம், ஸ்மார்ட் போன் இணைப்பு வசதி, ஹெட்ஸ் அப் திரை, வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், 520 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகிய வசதிகளும் இவி 6 காரில் வழங்கப்பட்டுள்ளன.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

இக்காரில் பாதுகாப்பு அம்சங்கள் ஏராளமாக வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 8 ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, டிராக்சன் கன்ட்ரோல், ஃபார்வார்டு கொள்ளிசன் கன்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை நங்கூரம், பிளைண்ட் ஸ்பாட் வார்னிங், டைனமிக் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் சேஞ்ஜிங் அசிஸ்ட், ஃப்ரண்ட் வெயிக்கிள் இன்டிகேட்டர் மற்றும் லீடிங் வெயிக்கிள் டிபார்ச்சர் அலர்ட் மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கேமிரா ஆகிய அம்சங்களையும் கியா நிறுவனம் இவி6 எலெக்ட்ரிக் காரில் வழங்கியிருக்கின்றது.

அறிவித்தபடியே இவி6 எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்தது கியா... பிரம்மிப்பை ஏற்படுத்தும் பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கு!

கியா நிறுவனம் இந்த மின்சார காரை இந்தியாவின் குறிப்பிட்ட சில முக்கிய நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாகக் கூறியிருந்தோம். அது வெளியிட்டிருக்கும் நகரங்களின் பட்டியலில் பட்டியலில் சென்னையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube