இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக ஊடகப் பக்கமான ட்விட்டரில் பதிவிட்ட கருத்து:
டாடா ஐபிஎல் போட்டி முடிவுகளில் மோசடி நடப்பதாக உளவு ஏஜென்சிகள் பரவலாக கருதுகின்றன. எனவே இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை ஒன்று தேவைப்படலாம். இதற்காக பொதுநல மனு ஒன்று பதிவு செய்வது அவசியமாகலாம். ஏனெனில் அரசு விசாரணை நடத்த முன்வரவில்லை, காரணம் பிசிசிஐ-யின் உண்மையான சர்வாதிகாரியாக அமித் ஷாவின் மகன் இருக்கிறார்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளார்.
டாடா ஐபிஎல் கிரிக்கெட் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளில் பரவலான உணர்வு உள்ளது. அமித் ஷாவின் மகன் பிசிசிஐயின் சர்வாதிகாரியாக இருப்பதால் அரசு அதைச் செய்யாது என்பதால், PIL தேவைப்படக்கூடிய காற்றைத் தெளிவுபடுத்துவதற்கு ஒரு விசாரணை தேவைப்படலாம்.
— சுப்பிரமணியன் சுவாமி (@Swamy39) ஜூன் 2, 2022
ஏற்கனவே ஐபிஎல் 2013 தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுப்ரமணியன் சுவாமியின் இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.