தனக்கு தானே சொகுசு கப்பல் போன்ற வேனிட்டி வேனை பரிசளித்து கொண்ட பிரபல நடிகை… சொர்க்கம் மாதிரி இருக்கு!

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அவரது 47வது பிறந்த நாளை தற்போது கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இவரது பிறந்த நாளை அவரது குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் கோலாகளமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி தனுக்கு தானே ஓர் விலையுயர்ந்த வேனிட்டி வேனை பரிசளித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனக்கு தானே சொகுசு கப்பல் போன்ற வேனிட்டி வேனை பரிசளித்து கொண்ட பிரபல நடிகை... சொர்க்கம் மாதிரி இருக்கு!

இந்த வேனிட்டி வேனை தனது தனிப் பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனமாக அவர் கஸ்டமைஸ் செய்திருக்கின்றார். அதாவது, வாகனத்தை மினி சொகுசு விடுதியாக அவர் மாற்றியிருக்கின்றார். இதன்படி, மினி ஜிம், மேக்-அப் ரூம் மற்றும் பல சிறப்பு வசதிகள் கொண்டதாக வேன் மாற்றப்பட்டுள்ளது.

தனக்கு தானே சொகுசு கப்பல் போன்ற வேனிட்டி வேனை பரிசளித்து கொண்ட பிரபல நடிகை... சொர்க்கம் மாதிரி இருக்கு!

இதுபோன்று இன்னும் ஏராளமான வசதிகள் அதில் வழங்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். அதாவது, என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் எல்லாம் வேனில் இடம் பெற்றிருக்கின்றன என்பது பற்றிய முழு விபரத்தையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தனக்கு தானே சொகுசு கப்பல் போன்ற வேனிட்டி வேனை பரிசளித்து கொண்ட பிரபல நடிகை... சொர்க்கம் மாதிரி இருக்கு!

ஷில்பாவிற்காக வேனை மாற்றியமைத்த குழு, அந்த வாகனத்தின் உட்பக்கத்தை மட்டுமின்றி வெளிப்புறத்தையும் ஹெவியாக மாற்றியிருக்கின்றது. இதனால், முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அந்த வேன் காட்சியளிக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் அந்த வேனிட்டி வேன் மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. குறிப்பாக, வேனின் முகப்பு பகுதி வேற லெவலில் உள்ளது.

தனக்கு தானே சொகுசு கப்பல் போன்ற வேனிட்டி வேனை பரிசளித்து கொண்ட பிரபல நடிகை... சொர்க்கம் மாதிரி இருக்கு!

மெல்லிய மற்றும் கோண வடிவ ஹெட்லேம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பம்பருக்கு மேல் நான்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை ஹாலோஜன் ரக மின் விளக்குகள் ஆகும். அடர் இருட்டான சாலைகளில் பயணிக்க இந்த லைட்டுகள் மிகுந்த உதவியாக இருக்கும். இத்துடன் முகப்பு பகுதிகளில் ஷில்பா ஷெட்டி குந்த்ரா எனும் பெயரின் ஆரம்ப எழுத்துக்கள் (இனிஷியல்கள்) ஒட்டப்பட்டுள்ளன.

தனக்கு தானே சொகுசு கப்பல் போன்ற வேனிட்டி வேனை பரிசளித்து கொண்ட பிரபல நடிகை... சொர்க்கம் மாதிரி இருக்கு!

இதேபோல், வேனின் உட்பக்கமும் பல மடங்கு சூப்பரானதாக அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. துள்ளியமாகக் கூற வேண்டுமானால் 5 நட்சத்திர விடுதியைப் போல் அது காட்சியளிக்கின்றது. இவ்வாறு நாம் கூறுவதற்கு வேனின் உட்பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிரீமியம் தர உபகரணங்களே காரணமாக உள்ளன. வாகனத்தின் உட்பக்க தரை பகுதியாக இருக்கட்டும், ரூஃபாக இருக்கட்டும், ஏன் பக்கவாட்டு பகுதிகளைக் கூடி பிரீமியம் தரத்தில் மாற்றியிருக்கின்றனர்.

தனக்கு தானே சொகுசு கப்பல் போன்ற வேனிட்டி வேனை பரிசளித்து கொண்ட பிரபல நடிகை... சொர்க்கம் மாதிரி இருக்கு!

இத்துடன், சிறிய எல் வடிவ கிட்சன், மேக்-அப் ரூம் என சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. கிட்சனில் சமைக்கும் விதமாக மைக்ரோஓவன், சிம்னி, பொருட்களை அடுக்கி வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஷெல்வுகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, ஷோபா, சேர், குஷன்கள், பெரிய கண்ணாடிகள், ஆம்பியன் லைட்டுகள் மற்றும் ரூஃப் மவுண்டட் லைட்டுகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டிருக்கின்றன.

தனக்கு தானே சொகுசு கப்பல் போன்ற வேனிட்டி வேனை பரிசளித்து கொண்ட பிரபல நடிகை... சொர்க்கம் மாதிரி இருக்கு!

இத்துடன், மிக முக்கியமான அம்சமாக வேனின் மேற்கூரை பகுதியில் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இவற்றினாலயே இந்த வாகனம் ஐந்து நட்சத்திர விடுதியையே மிஞ்சும் வகையில் காட்சியளிக்கின்றது. ஷில்பா ஷெட்டி ஃபிட்னஸ் மீது அதிகம் அக்கறைக் கொண்டவர் ஆவார்.

தனக்கு தானே சொகுசு கப்பல் போன்ற வேனிட்டி வேனை பரிசளித்து கொண்ட பிரபல நடிகை... சொர்க்கம் மாதிரி இருக்கு!

இதனால் தான் பசுமையான புல் தரை போன்ற அமைப்புடைய உடற்பயிற்சி இடத்தை வேனிட்டி வேனில் அவர் அமைத்திருக்கின்றார். படப்படிப்பு தளத்திலும் யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த வசதியை அவர் ஏற்படுத்தியிருக்கின்றார். ஆனால், எவ்வளவு ரூபாய் செலவு செய்து இந்த வாகனத்தை அவர் வாங்கியிருக்கின்றார் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. மேலும், இந்த வேனை கஸ்டமைஸ் செய்து கொடுத்தவர்கள் யார் என்கிற தகவலும் வெளிவரவில்லை.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube