Bigg Boss Tamil 6, Azeem: குவின்ஸியை நீதிபதியும் பார்க்காம இந்த அசீம் செய்த காரியத்தை பார்த்தீங்களா! – bigg boss tamil 6: நீதிபதி குயின்சியை அவமதித்த அசீம்


பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் அசீம் நீதிபதி ராமை அடுத்து நீதிபதி குவின்சியையும் அசிங்கப்படுத்திவிட்டார்.

வழக்குகள்

பிக் பாஸ் 6 வீட்டை இந்த வாரம் நீதிமன்றமாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால் நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகள் எல்லாம் ரொம்ப சின்னப்புள்ளத்தனமாக இருக்கிறது என விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் சாப்பிட்ட தட்டு, டீ குடித்த கப்பை கழுவாதது எல்லாம் ஒரு வழக்கு என்று அதை நீதிமன்றம் வரை கொண்டு வந்திருக்கும் புரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ட்விட்டர்-விஜய் தொலைக்காட்சி

குவின்ஸி

95754227

தினமும் ஒருவரை நீதிபதியாக்குகிறார்கள். இந்நிலையில் இன்று குவின்சியை நீதிபதி நாற்காலியில் அமர வைத்துள்ளனர். நேற்றே குவின்ஸி பேசியதுடன், கோபமும் பட்டார். அடடே, சிட்டிக்கு கோபம் எல்லாம் வருதே வசி என பார்வையாளர்கள் கிண்டல் செய்தார்கள். இதையடுத்தே குவின்ஸியை நீதிபதியாக்கி நீங்கள் ஒரு நல்ல தீர்ப்பை சொல்லுங்கம்மா என பொறுப்பை கொடுத்திருக்கிறார் பிக் பாஸ்.

அசீம்

95754226

சாட்சி கூண்டில் நிற்கும் ஆயிஷா, யார் யார் குடித்தார்களோ கப்பை கொண்டு வந்து பாத்திரம் கழுவும் அணியிடம் கொடுக்க வேண்டும் என்று இந்த வாரம் நான் கேட்டேன் என்றார். அதை யாருமே ஃபாலோவே பண்றதில்ல என வழக்கறிஞர் மணிகண்டன் கேட்க, ஆமாம் என்றார் ஆயிஷா. அவரை அடுத்து சாட்சி கூண்டுக்கு வந்தார் அசீம். அவர், இந்த டியூட்டி செல்ஃப் டியூட்டி தானே. நான் பர்சனலா பார்த்தது குவின்ஸியை பார்த்தேன். சாப்பிட்டுவிட்டு பிலேட்டை கழுவாமல் வந்துவிட்டார். குவின்ஸி அவங்க சாப்பிட்ட பிலேட்டையும், கப்பையுமே கழுவவில்லை என்றார்.

கோபம்

95754225

அதை கேட்ட குவின்சிக்கு கோபம் வந்தது, இது ஒருத்தரை பற்றி மட்டும் அல்ல. இது பொது கருத்துனு தெரிந்து செயல்படலாம் என்று அறிவுரை வழங்க அசீம் கடுப்பாகிவிட்டார். நீங்களும் இந்த வீட்டில் பொதுவாகத் தான் இருக்கீங்க குவின்ஸி. அதனால் தான் நான் சொன்னேன். நான் எல்லோரையும் சேர்த்து தான் சொன்னேன் என்றார் அசீம்.

ராம்

95754224

முன்னதாக நீதிபதி நாற்காலியில் இருந்த ராமை அசிங்கப்படுத்தினார் அசீம். அய்யகோ ராம் தாக்கப்பட்டாரா என்று பார்வையாளர்கள் சிரிப்பாய் சிரித்தார்கள். இதையடுத்து நீதிபதி குவின்சிக்கும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

தோல்வி

95754285

புரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, குவின்சிக்கு கோபம் வருது. அதனால் இந்த வார இறுதியில் அசீமை விளாசப் போகிறார் கமல் ஹாசன். அசீம் சொன்னது தான் சரி. ஆரம்பத்தில் இருந்தே அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் குவின்ஸி. நேற்று குவின்சிக்கிட்ட தோற்ற காண்டில் இப்படி பேசுறார் அசீம் என பதிவு.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube