பாஜக வளருகிறது, பொன்னையன் வளரவில்லை. அதனால், பொன்னையன் கூறியதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன், தமிழ்நாட்டில் அதிமுக-தான் எதிர்க்கட்சி. ஆனால் பாஜக தன்னை எதிர்க்கட்சி போல முன்னிறுத்த பார்க்கிறது. அதை முறியடிக்க வேண்டும். இதற்கு இணையத்தில் ஐடி விங் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்று பேசியிருந்தார். அவரது பேச்சால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பாஜக வளர்ந்து கொண்டு வருகிறது, பொன்னையனால் வளர முடியவில்லை அந்த ஆதங்கத்தில் பேசியுள்ளார் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா கூறும்போது, பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு ஜி.எஸ்.டி குறித்து முதல்வர் புரிதல் இல்லாமல் பேசி உள்ளார். மத்திய அரசு நேற்று தமிழகத்திற்கு 31-05-22 வரை உள்ள ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.9,602 கோடியை கொடுத்துள்ளது.
மேடையில் முதல்வர் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வரவேண்டியது 14,000 கோடி எனக் கூறியது தவறு. மத்திய அரசின் கலால் வரியை விட தமிழக அரசு பெட்ரோலுக்கு இரண்டு ரூபாய் ஐந்து பைசாவும், டீசலுக்கு இரண்டு ரூபாய் இருபது காசும் அதிகமாக வரி விதிக்கிறது.
பொன்னையன் அதிமுக நிர்வாகத்தில் ஆக்டிவாக இல்லை. பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது, பொன்னையன் வளரவில்லை. அவருக்கு வயதாகிவிட்டது, அவர் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. இதை இபிஎஸ், ஓபிஎஸ் சொன்னால் கருத்து கூறலாம்.
Also Read :இரட்டை வேடம் போடும் பாஜக.. பொன்னையன் பேச்சால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு
பாஜக வளர்ந்து வருவது நேற்று தெரிந்திருக்கும், வரும் 20ம் தேதியும் தமிழகம் முழுவதும் காண்பீர்கள் என்று கூறினார். மேலும் தேசியம் தான் பிரிவினைவாத திராவிட மாடலுக்கு மாற்று என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள துவங்கியுள்ளனர்.
தமிழகத்தில் உணவுத்துறை மோசமாக உள்ளது பொங்கல் தொகுப்பில் மட்டும் ஊழல் நடைபெறவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிக்கு ரூ.100 கோடி செலவழிக்க தயாராக இருப்பதாக திமுக அமைச்சர் ஒருவர் கூறி வருகிறார். அதற்குள் அவ்வளவு பணம் சேர்த்தாச்சாம் . ஊழல் அரசு விரட்டியடிக்கப்பட வேண்டும் இரு அமைச்சர்கள் மட்டும் ஊழல் செய்யவில்லை அதையும் தாண்டி உணவுத்துறை அமைச்சர் உலக மகா ஊழல் செய்துள்ளார் என்று அவர் குற்றம் சாட்டினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Source link
Please follow and like us:
BJP is growing Ponnaiyan is not growing There is no need to take what Ponnaiyan said – BJP H Raja