Bonda Mani: போண்டா மணிக்கு சிறிய அறுவை சிகிச்சை… தேவையான உதவிகளை செய்வேன்… பிரபல நடிகர் தகவல்! – நடிகர் பார்த்திபன் போண்டா மணிக்கு உதவுகிறார்


நடிகர் போண்டாவுக்கு சனிக்கிழமை சிறிய அறுவை சிகிச்சை நடைபெறுவதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

நடிகர் போண்டா மணி

பிரபல நகைச்சுவை நடிகரான போண்டா மணியின் இரண்டு சிறு நீரகங்களும் செயலிழந்துள்ளது. இதையடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் போண்டா மணி. அவருக்கு உதவுமாறு சக நடிகரான பென்ஷமின் கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போண்டா மணியை நேரில் சந்தித்தார்.

பொண்டாட்டியை ஏமாற்றும் ரவீந்தர்!

அமைச்சர் உறுதி

94403461

அவருக்கான சிகிச்சை செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்று கூறிய அமைச்சர் மா சுப்பிரமணியன், உறவினர்கள் யாராவது சிறுநீரகம் கொடுக்க முன்வருவார்களா என கேளுங்கள் என்றார். சிறு நீரகம் கிடைத்தால் உடனடியாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து விடலாம் என்றும் அமைச்சர் கூறியிருந்தார்.

Ravindar Mahalakshmi: கல்யாணம் முடிந்த கையோடு ரவியும் மகாவும் யாரை போய் பார்த்திருக்காங்க… பாருங்க!

நடிகர்கள் உதவி

94403460

வீடியோ வெளியானதை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் போண்ட மணிக்கு உதவ முன்வந்துள்ளனர். அந்த வகையில் நடிகர் சங்கம் சார்பில் போண்டா மணியை சந்தித்த நடிகர் மனோ பாலா, அவருக்கு நிதியுதவி அளித்தார். நடிகர் விஜய் சேதுபதியும் போண்டா மணிக்கு நிதியுதவி செய்துள்ளார்.

Bigg Boss 6: பிக்பாஸ் சீசன் 6ல் நிச்சயம் இவர் இருப்பார்… அடித்து சொல்லும் பிரபலம்!

பார்த்திபன் உதவி

94403475

நடிகர் வடிவேலு தன்னால் முடிந்ததை செய்வேன் என கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் பார்த்திபனும் போண்டா மணிக்கு உதவி செய்துள்ளார். போண்டா மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை அறிந்ததும் மருத்துவர் பக்தவச்சலத்திடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அறுவை சிகிச்சை

94403455

அப்போது போண்டா மணிக்கு தற்போது டயாலிசிஸ் செய்யப்பட உள்ளதாகவும், சனிக்கிழமை சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக மருத்துவர் கூறியதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். மேலும் போண்டா மணியின் அன்றாட தேவைக்காக தனது மனிதநேய மன்றத்திலிருந்து பண உதவி செய்யப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தேவையான உதவிகளை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தீபா: நடிகை தீபா தற்கொலையில் திடீர் திருப்பம்… மாயமான ஐ போன் கண்டுபிடிப்பு!



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube