போண்டா மணி: 1 கோடிக்கு சமம்: போண்டா மணிக்காக விஜய் சேதுபதி செய்த உதவி.! நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு உதவிய நடிகர் விஜய் சேதுபதி


தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர் போண்டாமணி. இவர் தற்போது சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு நடிகர், நடிகைகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனவும் நடிகர் பென்ஷமின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை நேரில் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அவரின் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும் என உறுதியளித்தார். மேலும் போண்டாமணிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதேபோல் திரையுலக நடிகர்கள் பலரும் தற்போது போண்டாவிற்கு உதவ முன்வந்துள்ளனர். நடிகர் சங்கம் சார்பாகவும் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர். அதேபோல் நடிகர் வடிவேலுவும் பத்திரிக்கையாளர்களிடம் தன்னால் இயன்ற உதவியை செய்வேன் எனவும் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், போண்டா மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் உடனடியாக அவரது வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாயை நடிகர் விஜய்சேதுபதி போட்டுள்ளார் என்றும், அவர் ஒரு லட்சம் கொடுத்துள்ளார் எனக்கு ஒரு கோடிக்கு சமம் என மனதார வாழ்த்தி, விஜய்சேதுபதிக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ள வீடியோ வெளியிட்டுள்ளார் போண்டா மணி.

Naane Varuven: தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் கதை இதுதானா.?: இது அஜித் பட கதையாச்சே..!

மேலும் விஜய்சேதுபதி, வடிவேலு மற்றும் நண்பர்களின் செயல்களால் நான் இப்பவே பாதி குணமாகிட்டேன் என மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

“நடிகர் போண்டா மணி கவலைக்கிடம்” கண்ணீர் விட்டு அழுத நடிகர் பெஞ்சமின்!Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube