புதிய ஹூண்டாய் வெனியூ காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடங்கியது… எவ்ளோ ரூபாய் கட்டணும் தெரியுமா?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும். போட்டி அதிகரித்து கொண்டே வருவதை மனதில் வைத்து, வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

புதிய ஹூண்டாய் வெனியூ காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடங்கியது... எவ்ளோ ரூபாய் கட்டணும் தெரியுமா?

2022 ஹூண்டாய் வெனியூ கார் வரும் ஜூன் 16ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தற்போது ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில், வெனியூ ஃபேஸ்லிஃப்ட் கார் பட்டியலிடப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் வெனியூ காரை பல்வேறு வகைகளில் அப்டேட் செய்துள்ளது.

புதிய ஹூண்டாய் வெனியூ காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடங்கியது... எவ்ளோ ரூபாய் கட்டணும் தெரியுமா?

தற்போதைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2022 ஹூண்டாய் வெனியூ காரின் டிசைன் நன்றாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் புதிய அதிநவீன வசதிகளும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் அதே நேரத்தில், புதிய ஹூண்டாய் வெனியூ காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளும் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.

புதிய ஹூண்டாய் வெனியூ காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடங்கியது... எவ்ளோ ரூபாய் கட்டணும் தெரியுமா?

21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, 2022 ஹூண்டாய் வெனியூ காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தியா முழுவதும் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்கள் மூலமாகவோ அல்லது ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவே புதிய வெனியூ காரை வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டிருப்பதால், 2022 ஹூண்டாய் வெனியூ காருக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

புதிய ஹூண்டாய் வெனியூ காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடங்கியது... எவ்ளோ ரூபாய் கட்டணும் தெரியுமா?

டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்பட்டாலும் கூட, தற்போதைய மாடலில் உள்ள அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகள்தான் 2022 ஹூண்டாய் வெனியூ காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி 2022 ஹூண்டாய் வெனியூ காரில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வு வழங்கப்படலாம்.

புதிய ஹூண்டாய் வெனியூ காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடங்கியது... எவ்ளோ ரூபாய் கட்டணும் தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஹெச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருக்கும். இதுதவிர 118 பிஹெச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படலாம். அத்துடன் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் 2022 ஹூண்டாய் வெனியூ பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் வெனியூ காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடங்கியது... எவ்ளோ ரூபாய் கட்டணும் தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 82 பிஹெச்பி பவரை உருவாக்க கூடியது. 2022 ஹூண்டாய் வெனியூ காரை பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள், வரும் நாட்களில் வெளியாகவுள்ளது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப விலை 7.11 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 11.84 லட்ச ரூபாயாக இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெனியூ காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடங்கியது... எவ்ளோ ரூபாய் கட்டணும் தெரியுமா?

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் புதிய அப்டேட்கள் வழங்கப்படுவதன் காரணமாக ஹூண்டாய் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை இதை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். புதிய வெனியூ காருக்கு ஹூண்டாய் நிறுவனம் சவாலான விலையையே நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் வெனியூ காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடங்கியது... எவ்ளோ ரூபாய் கட்டணும் தெரியுமா?

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், கியா சொனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் போன்ற கார்களுடன் ஹூண்டாய் வெனியூ போட்டியிட்டு வருகிறது. இதில், சமீப காலமாக டாடா நெக்ஸான் கார், ஹூண்டாய் வெனியூ உள்பட இந்த செக்மெண்ட்டில் உள்ள மற்ற அனைத்து கார்களுக்கும் கடுமையான போட்டியாக மாறியுள்ளது.

புதிய ஹூண்டாய் வெனியூ காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடங்கியது... எவ்ளோ ரூபாய் கட்டணும் தெரியுமா?

அதே நேரத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடலை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. நடப்பு ஜூன் மாதமே இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி மிக கடுமையாக அதிகரித்து வரும் போட்டியை, வெனியூ காரின் புதிய மாடல் மூலம் சமாளிப்பதற்கு ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube